அப்போ அந்த படங்கள் வரும்போது கேள்வி கேட்டீங்களா…? இப்போ மட்டும் ஏன் கேக்குறீங்க… அமீர் காட்டம்…

Published:

அமீர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகராவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார் அமீர்.

பாலா இயக்கிய விருது பெற்ற திரைப்படங்களான சேது மற்றும் நந்தாவில் உதவி இயக்குனராக அமீர் பணி புரிந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. முதல் படமே வெற்றி படமாக அமீருக்கு அமைந்தது. இந்த படம் நடிகர் சூர்யாவை வேற ஒரு கோணத்தில் காட்டியது. இந்த படத்தில் தான் நடிகை திரிஷா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நடிகர் ஜீவாவை வைத்து 2005 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் இசையமைப்பிற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்தது. அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு கார்த்தியை அறிமுகப்படுத்தி பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார்.

இயக்குவது மட்டுமல்லாமல் அமீர் சில படங்களை தயாரித்து உள்ளார். மேலும் ஒரு நடிகனாகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். வட சென்னை திரைப்படத்தில் அமீர் நடித்ததற்கு அனைவரின் பாராட்டுகளை பெற்றார். வடசென்னை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதை வென்றார் அமீர்.

குறைந்த அளவிலே படங்களை எடுத்திருந்தாலும் அமீர் படங்களின் கதைகளும் தனித்துவமாகவும் மக்கள் பேசும் விதத்திலும் இருக்கும். நான் வருடத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்ய மாட்டேன். என்னால் முடிந்த அளவில்தான் படம் எடுப்பேன். ஆனால் குறைந்த அளவில் படங்கள் எடுத்தாலும் தரமானதாக எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்று அமீர் கூறி இருக்கிறார்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அமீர் அவர்களிடம் சாதிய திரைப்படங்களை எடுக்கும் மாறி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித்தை பற்றி கேள்வி கேட்டபோது அமீர் காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் அப்போவே சின்ன கவுண்டர், தேவர் மகன் போன்ற சாதிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வரத்தான் செய்தது. அப்போ எல்லாரும் கேள்வி கேட்டீங்களா? இல்லையே. இப்போ ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து ஒருத்தன் வரான் அவனுக்கு ஒரு மேடை கிடைக்குது. கெடச்ச மேடையில் அவன் பின்புறத்தை பற்றி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை பற்றி பேச தான் செய்வான். அப்போ அந்த மாதிரி படங்கள் வரும்போது கேள்வி கேட்காத நீங்க இப்ப மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்க என்று கோபமாக பேசியுள்ளார் அமீர்.

மேலும் உங்களுக்காக...