பிக்பாஸ் சீசன் 8-ல் தொகுப்பாளராகக் களம் இறங்கப் போகும் விஜய் சேதுபதி..?

By John A

Published:

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்க விஜய் சேதுபதி களம் இறங்கலாம் எனத் தெரிகிறது. வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் முதலில் இந்தி மொழியில் ஒளிபரப்பானது.

இதனை முதன் முதலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். அதன்பின் இந்திய மொழிகள் பலவற்றிலும் பிக்பாஸ் ஒளிபரப்பானது. தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதுவரை 7 சீசன்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பிரபலங்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் பலருக்கு பிக்பாஸ் மூலம் நல்ல அடையாளமும் கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை ஈர்த்ததால் நாளுக்கு நாள் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூடினர்.

இதனால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் பிக்பாஸ் முன்னிலை வகித்தது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு இறுதியில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும் அவருக்கு பல இலட்சம் பரிசும் வழங்கப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகும் வேலைகள்.. இந்த மாதம் மட்டும் 8000 பேர் வேலையிழப்பு..!

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அண்மையில் கமல்ஹாசன் அறிவித்தார். தனக்கு வரிசையாக இருக்கும் பட வேலைகளை முடித்தபின் மீண்டும் பிக்பாஸில் இணைவதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனால் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதில் விஜய்சேதுபதி, சிம்பு ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டன. தற்போது விஜய் சேதுபதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சன்டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கினார் விஜய்சேதுபதி. இந்நிலையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் எனத் தெரிகிறது. தற்போது இதற்காக போட்டியாளர்கள் தேர்வு, செட் அமைக்கும் பணி போன்றவை நடைபெற்று வருகிறது.