திருடிய நெக்லஸ் அணிந்து வாட்ஸ் அப்பில் புகைப்படம்.. வேலைக்காரியை கைது செய்த போலீஸ்..!

By Bala Siva

Published:

வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் தான் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளரின் நெக்லஸை திருடிய நிலையில் அந்த நெக்லஸை அணிந்து புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் டிபி ஆக பதிவு செய்தார். இதனை அடுத்து அவர் ஒரு சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளரின் நெக்லஸை திருடிவிட்டு அதன் பிறகு வேலைக்கும் அவர் செல்லவில்லை .

இதனை அடுத்து வீட்டில் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் நெக்லஸை திருடி சென்ற வேலைக்காரியை பிடிப்பதற்காக தீவிர முயற்சியில் இருந்தனர்.

65 கிராம் எடை கொண்ட தங்க நெக்லஸ் காணாமல் போன நிலையில் அந்த நெக்லஸை திருடிய வேலைக்காரி அதை அணிந்து செல்பி புகைப்படம் எடுத்து தன்னுடைய வாட்ஸ் அப்பில் டிபி புகைப்படமாக வைத்திருந்தார். சில மாதங்கள் கழித்து இதை கண்டுபிடித்த போலீசார் அவரை தேடிச் சென்றபோது அவர் தான் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

முதல் கட்ட விசாரணையில் நெக்லஸ் மட்டும் இன்றி மேலும் அவர் இரண்டு மோதிரங்கள், வளையல்கள் மற்றும் காதணிகள் உட்பட ஒரு சில நகைகளை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: jewel, theft, whatsapp