கதை சூப்பர்.. விக்ரம் நடித்து பிளாப் ஆன படத்தின் கதையை கேட்டதும் நடிக்க விரும்பிய விஜய்..

பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதலில் ஒரு படைப்பு உருவாகும் போது ஆரம்பத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை நடிக்க இருந்த திரைப்படத்தில் திடீரென ஆட்கள் மாற்றப்படுவார்கள். இன்னொரு பக்கம், ஒரு நடிகருடன் ஷூட்டிங்கை…

vijay and vikram

பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதலில் ஒரு படைப்பு உருவாகும் போது ஆரம்பத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை நடிக்க இருந்த திரைப்படத்தில் திடீரென ஆட்கள் மாற்றப்படுவார்கள். இன்னொரு பக்கம், ஒரு நடிகருடன் ஷூட்டிங்கை ஆரம்பித்து பின்னர் ஏதாவது காரணங்களுக்காக அவர் பாதியில் விலக, வேறொரு நடிகர் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் நடிக்க தொடங்கி உருவான படங்கள் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

உதாரணத்திற்கு சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த உன்னை நினைத்து திரைப்படத்தில் விஜய் தான் ஆரம்பத்தில் நடித்து வந்தார். பின்னர் சில முடிவுகள் அவருக்கு பிடிக்காமல் படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சூர்யா அந்த படத்தில் நடித்து மிகப் பெரிய ஹிட்டையும் கொடுத்திருந்தார்.

இதே போல, அஜித் குமார் தவறவிட்ட நான் கடவுள் படத்தில் ஆர்யா நடித்து பெயர் எடுத்தது, ரஜினிகாந்த் நடிக்க இருந்த ஜக்குபாய் திரைப்படத்தில் பின்னர் சரத்குமார் நடித்து வெளியானது என நிறைய திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதே போல, யோஹன் அத்தியாயம் ஒன்று, சென்னையில் ஒரு மழைக்காலம், கெட்டவன், மிரட்டல், வேட்டை மன்னன் என நிறைய திரைப்படங்கள் அறிவிப்புடன் ஷூட்டிங் செல்லாமலே நின்று போன படங்களும் நிறைய உள்ளது.

அந்த வகையில், விஜய் நடிக்க விரும்பிய கதையில் பின்னர் விக்ரம் நடித்த படம் குறித்த தகவலை தான் தற்போது பார்க்க போகிறோம். நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக உருவான பல படங்களில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள் தான் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

அதற்கு முன்பு வெளியான நிறைய படங்கள், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகினாலும் ஹிட் படங்களாக விக்ரமுக்கு அமையவில்லை. இதனிடையே, பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

தங்கலான் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வர, நிச்சயம் விக்ரமிற்கு பெரிய ஹிட்டாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விக்ரம் நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான பத்து எண்றதுக்குள்ள திரைப்படம் முதலில் விஜய் நடிக்க விரும்பிய கதையாம்.
10 endrathukulla HD wallpapers | Pxfuel

விக்ரம் மற்றும் சமந்தா நடித்திருந்த பத்து எண்றதுக்குள்ள படத்தின் கதையை விஜய்யிடம் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். கதையை கேட்டதும் விஜய்க்கு பிடித்து போனதாகவும், சில தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த கதையை சொல்வதற்காக விஐய் மில்டனை அவர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், பின்னர் சில காரணங்களால் விஜய்யை வைத்து விஜய் மில்டனால் படத்தை உருவாக்க முடியாமல் போக, தொடர்ந்து விக்ரம் நடிப்பில் பத்து எண்றதுக்குள்ள திரைப்படம் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.