இனி பெண்களின் திருமண வயது 9.. வரப்போகும் புதிய சட்டம்.. வலுக்கும் எதிர்ப்பு.. எந்த நாட்டில் தெரியுமா?

இந்தியாவில் பால்ய விவாகத்தினைத் தடுக்கும் வகையில் ஆண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியும், பெண்களின் திருமண வயது 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. ஆனால்…

Iraq

இந்தியாவில் பால்ய விவாகத்தினைத் தடுக்கும் வகையில் ஆண்களின் திருமண வயது குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியும், பெண்களின் திருமண வயது 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறியும் சில இடங்களில் 18 வயதிற்குக் குறைவாக திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.

பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் தயாராவதற்கு 18 வயது என்பது குறைந்தபட்ச வயதாக உள்ளது. இந்நிலையில் ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயது 9 ஆகவும், ஆண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இச்சட்டம் முன்மொழிதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஈராக் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த நாட்டில் பெண்களின் திருமண வயதானது 18 என இருந்து வந்தது. இருப்பினும் 28% பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னரே திருமணம் முடித்து வைப்பதாக ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டத்தினை காப்பியடித்த ஆந்திரா, ஒடிசா.. நல்லது நடந்தா சரிதான்..

இந்நிலையில் பெண்கள் தகாத உறவுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க இனி பெண்களின் திருமண வயது 9-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாகும் நிலையில் பெரும் விளைவுகளைத் தோற்றுவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இதனை சட்டமாக்கக் கூடாது என பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குழந்தைத் திருமணத்திற்கு அதிகம் வழிவகுக்கும் என்றும், பெண்கள் மீதான சுரண்டலுக்கு வித்திடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதுமட்டுமன்றி இந்தச் சட்டத்தால் பெண் கல்வி, பருவ வயதிலேயே கர்ப்பம், கல்வி இடைநிற்றல் போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் பெண்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.