ஒரு ஆர்டர், இரண்டு பேமெண்ட்.. அமேசானில் ஏமாந்த டெல்லி பெண்..!

Published:

அமேசான் நிறுவனத்தில் ஆன்லைனில் ஒரு பொருள் ஆர்டர் செய்த டெல்லியை சேர்ந்த பெண், இரண்டு முறை தன்னிடம் பேமெண்ட் பெற்று விட்டதாக கூறி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த ஸ்வாதி சிங்கால் என்ற பெண், அமேசான் ஆன்லைன் தளத்தில் டேப்லெட் ஆர்டர் செய்ததாகவும் அதற்கான பணத்தை கேஷ் ஆன் டெலிவரி என்ற முறையில் ஆர்டர் செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு வந்த ஒரு அழைப்பில், கேஷ் ஆன் டெலிவரியில் சிக்கல் இருப்பதால் பணத்தை ஆன்லைனில் கட்ட வேண்டும் என்று தெரிவித்ததாகவும் இதனை அடுத்து ஆன்லைனில் பணத்தை செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனக்கு ஒரு பார்சல் வந்த நிலையில் அந்த பார்சலுக்கு கேஷ் ஆன் டெலிவரி முறையில் பணம் செலுத்த வேண்டும் என்று தன்னிடம் பணம் வாங்கி விட்டதாகவும் ஆனால் அந்த ஆர்டர் தான் செய்யவே இல்லை என்றும் கூறியுள்ளார். அந்த  பார்சலில் தான் ஆர்டர் செய்யாத ஸ்பீக்கர் வந்திருந்ததாகவும் அதன் பிறகு இரண்டாவது ஆகத்தான் ஆர்டர் செய்த டேப்லெட் வந்ததாகவும் கூறியுள்ளார்.

இரண்டு ஆர்டரிலும் ஒரே நம்பர் இருந்தது என்றும் ஒரு ஆர்டரில் தன்னிடம் இரண்டு விதமான பேமென்ட் வாங்கிவிட்டு தான் ஆர்டர் செய்யாத ஒரு பொருளையும் ஆர்டர் செய்த ஒரு பொருளையும் டெலிவரி செய்திருக்கிறார்கள் என்றும் இது மோசடி என்றும் அவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அமேசான் போன்ற நம்பகத்தன்மையுள்ள நிறுவனத்திடம் இதுபோன்ற மோசடி இருந்தால் மற்ற நிறுவனங்களை என்ன சொல்வது? என்று அவர் அவரது பதிவுக்கு கமெண்ட் பதிவாகி வருகிறது. இதையடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நேரில் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...