உங்கள் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? அரசு அறிவித்த சூப்பர் வாய்ப்பு..!

இந்தியக் குடிமகன் என்பதற்கு ஆதாரமாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் நம் உண்மையான வயதினை அறிவதற்கும், பள்ளிகளில் முதன்முதலாக கல்விச் சேர்க்கைக்கும், வெளிநாடு செல்வதற்கும், ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கும்…

Birth Certificate

இந்தியக் குடிமகன் என்பதற்கு ஆதாரமாக எப்படி வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் நம் உண்மையான வயதினை அறிவதற்கும், பள்ளிகளில் முதன்முதலாக கல்விச் சேர்க்கைக்கும், வெளிநாடு செல்வதற்கும், ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கும் என பல்வேறு அரசின் திட்டங்களுக்கு முக்கிய சான்றாக விளங்குவது பிறப்புச் சான்றிதழ். அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் அந்தப் பகுதி நகராட்சி, மாநகராட்சி  பிறப்பு இறப்பு பதிவாளர் மூலமாக மருத்துவ ஆவணங்களை வைத்து பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பெரும்பாலும் குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்காமலேயே பிறப்புச் சான்றிதழ் பெற்று விடுகின்றனர். சிலர் குழந்தைக்குப் பெயர் வைத்தபின் அதனையும் பிறப்புச் சான்றிதழில் சேர்த்தே பெறுகின்றனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்கு முக்கிய ஆவணமாக இருக்கும் பிறப்பு-இறப்பு பதிவேடு என்பது இன்றியமையாத ஒன்று.

மார்பக புற்றுநோயை 5 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கலாம்.. ஏஐ டெக்னாலஜியின் ஆச்சரியம்..!

மேலும் பிறப்புச் சான்றிதழ் பெற்று 15 ஆண்டுகளுக்குள் பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க வேண்டும் என்பது விதிமுறை. தற்போது சான்றிதழ் பெற்று இதுவரை பெயர் சேர்க்காதவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருந்து அதில் பெயர் சேர்க்காதவர்களுக்கு தங்களது பெயரை இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பிறப்புச்சான்றிதழில் பெயரைச் சேர்த்துக் கொள்ளுமாறு பிறப்பு-இறப்பு பதிவாளர் செல்வவிநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.