ஏஐ டெக்னாலஜி மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
ஏஐ டெக்னாலஜி மூலம் தற்போது பல வேலைகள் சுலபமாகமாக்கப்பட்டு வருகிறது என்பதும் மருத்துவத் துறை முதல் சினிமா துறை வரை ஏஐ பயன்படுத்தாத துறையே இல்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஒருவருக்கு மார்பக புற்று நோய் வரும் என்பதை 5 ஆண்டுகளுக்கு முன்பே ஏஐ டெக்னாலஜி மூலம் கண்டுபிடிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் சராசரியாக 8 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்றும் இதனை மெமோகிராம் என்ற டெக்னாலஜி மூலம் தற்போது மருத்துவர்கள் முன்கூட்டியே கண்டுபிடித்து மருத்துவம் செய்தாலும் சில நேரங்களில் இந்த டெக்னாலஜி மூலம் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கு தீர்வு காணும் வகையில் மிராய் என்ற பெயரில் புதிய ஏஐ டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த டெக்னாலஜியின் படி ஒரு பெண்ணுக்கு மார்பக புற்று நோய் வரும் என்பதை ஐந்தாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து ஆரம்ப நிலையில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஏஐ டெக்னாலஜியின் ஆச்சரியம் குறித்து பகிர்ந்துள்ளார். நாம் நினைப்பதை விட ஏஐ டெக்னாலஜி தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக மனித குலத்திற்கு இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் அவரது பதிவு வைரல் ஆகி வருகிறது.