அது நான் இல்லை.. இயக்குநர் விஜய் மில்டனுக்கு நச் பதில் கொடுத்த விஜய் ஆண்டனி

Published:

தமிழில் குத்துப்பாட்டு என்றாலே தேவாவிற்குப் பிறகு ஞாபகத்திற்கு வருபவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான். 90s கிட்ஸ், 2K கிட்ஸ்களின் மனம் கவர்ந்த துள்ளலிசைப் பாடல்களைக் கொடுத்து வைப் மோடில் வைத்திருந்தவர் விஜய் ஆண்டனி. புரியாத வார்த்தைகளைக் கொண்டு மெட்டமைப்பதில் கெட்டிக்காரர்.

தொடர்ந்து இவர் இசையைமத்த படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டாக புகழின் உச்சியில் இருக்கும் போதே நடிப்பில் ஆர்வமானார். நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு முதல் படமே சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்து ஹிட் கொடுத்தது. இதனையடுத்து சலீம் படமும் அதே பாணியில் வர ஆக்சன் நடிகராக உருவெடுத்தார்.

இந்நிலையில் பிச்சைக்காரன் படம் இவரை புகழின் உச்சியில் கொண்டு நிறுத்த தொடர்ந்து இசையமைப்பதிலிருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.தற்போது கோலி சோடா பட இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழைபிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்திருந்தார் விஜய் ஆண்டனி. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

வயநாடு நிலச்சரிவில் நெஞ்சை நொறுக்கும் சோகம்.. வெறும் கையை மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தை

சரத்குமார்,மேகா ஆகாஷ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் காட்சியைப் பார்த்த இயக்குநர் விஜய் மில்டன் படத்தில் முதலில் வரும் 2 நிமிட காட்சியை நான் எடுக்கவில்லை என்றும், படத்தில் நிறைய திருப்பங்கள் உள்ளன. அவை அத்தனைக்கும் இந்தக் காட்சி பதில் சொல்லிவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இயக்குநரின் இந்த பதில் சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படங்களில் இசை, எடிட்டிங், இயக்கம் என அனைத்திலும் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் படம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக் காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்துள்ளதாக என் நண்பர் படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை என விளக்கம் அளித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

மேலும் உங்களுக்காக...