தமிழ்த்திரை உலகில் அனைவராலும் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படுபவர் பாரதிராஜா. அவரது இயக்கத்தில் உருவான படங்களே இதற்கு சாட்சி. மனுஷன சும்மா சொல்லக்கூடாது. கிராமத்துப் படங்களை அப்படி காட்சிக்கு காட்சி இம்மி இம்மியாக செதுக்கி இருப்பாரு. அப்படிப்பட்ட ஒரு கிராமத்து மண்வாசனையைப் பரப்பக்கூடிய இயக்குனர் தான் அவர். பொதுவாக இவரைப் போல வேறு யாரும் கிராமியப் படங்களை இந்த அளவுக்கு சிறப்பாக எடுத்து இருக்க மாட்டாங்க என்றே சொல்லலாம்.
அவரது படங்களில் பொதுவாக கதாநாயகிகள் அழகாக சிகப்பாக இருப்பதைப் பார்த்திருப்போம். அவர் இயக்கிய பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி, அலைகள் ஓய்வதில்லை ராதா, மண்வாசனை ரேவதி, புதிய வார்ப்புகள் ரதி, கல்லுக்குள் ஈரம் அருணா, நிழல்கள் ரோஹினி, டிக் டிக் டிக் மாதவி, ராதா, வேதம்புதிது அமலா, புதுநெல்லு புதுநாத்து சுகன்யா, கருத்தம்மா ராஜஸ்ரீ, நாடோடித் தென்றல் ரஞ்சிதா ன்னு அழகழகான கதாநாயகிகள் தான். கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள் படத்தில் வரும் ராதிகா மட்டும் கொஞ்சம் புதுநிறம். மற்றபடி பல கதாநாயகிகள் சிகப்பானவர்கள் தான்.
இந்த சந்தேகத்தை நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பியுள்ளார். அதுபற்றி பார்ப்போம்.
யதார்த்தமான திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இருந்தாலும் அவரது திரைப்படங்களில் மட்டும் கதாநாயகிகள் தேவலோகத்து மங்கைகள் மாதிரி இருப்பாங்க.
16 வயதினிலே ஸ்ரீதேவியில் இருந்து பசும்பொன் சரண்யா வரைக்கும் யதார்த்தத்துல கிராமத்துப் பெண்கள் இவ்வளவு சிகப்பா இருப்பதில்லை. அப்படி இருந்தும் ஏன் இந்த முரண்பாடு என்று ஒரு நேயர் கேள்வி கேட்டுள்ளார்.
யதார்த்தத்துல எல்லா கிராமத்துப் பெண்களும் சிகப்பா இருக்க மாட்டாங்கன்னு வேணா சொல்லலாமே தவிர கிராமத்துப் பெண்கள் யாருமே சிகப்பா இருக்கவே மாட்டார்கள்னு சொல்ல முடியாது இல்லையா…
நானே கண்கூடாக பல கிராமத்துப் பெண்கள் சிகப்பா இருக்கறதைப் பார்த்திருக்கேன். அப்படிப்பட்ட பெண்களை மனதில் வைத்துக் கொண்டு பாரதிராஜா உருவாக்கிய படங்கள்னு அந்தப் படங்களை எடுத்துக்கோங்களேன் என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார்.