பொழுதுபோக்கு

புலி பட ஷூட்டிங்கிற்கு நடுவே.. மனைவி சங்கீதாவுக்கு விஜய் அனுப்பிய மெசேஜ்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச விஷயம்..

தமிழ் சினிமாவில் நம்பர் 1 கமர்சியல் ஹீரோவாக தொடர்ந்து வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அவரது திரைப்படங்கள் என்றாலே எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுடன் சண்டைக் காட்சிகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த வகையில் இருக்கும். இதன் காரணமாக நிறைய ரசிகர்களை அவர் உருவாக்கிக் கொண்டாலும் நடுவே சில படங்கள் தொடர் தோல்விகளாக அமைந்திருந்தது.

சுறா மற்றும் அதற்கு முன்பு வெளியான சில படங்களும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் விஜய் மீது அதிக விமர்சனங்கள் உருவாகியது. இதனால் எப்போதும் கமர்சியல் ரூட்டை பிடித்து வந்த விஜய் பின்னர் மீண்டும் காவலன் திரைப்படத்தின் மூலம் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற தொடர்ந்து வேலாயுதம், நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களும் விஜய்க்கு நல்ல ஒரு வெற்றியை கொடுத்திருந்தது.

கதையில் வித்தியாசம் காட்டினாலும் லுக்கில் வித்தியாசம் காட்டாமல் இருந்த விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி திரைப்படத்தில் முற்றிலும் ஒரு புதிய கதைக்களத்தில் வித்தியாசமான லுக்குடன் நடிக்க அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்திருந்தது. தற்போது வரை நிறைய இளம் இயக்குனர்களுடனும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் விஜய் நடித்து வரும் சூழலில், அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மைக் மோகன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இதனிடையே புலி படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே நடந்த சில விஷயங்கள் குறித்து அந்த படத்தின் ஒளிப்பதிவாளரும், பிரபல நடிகருமான நட்டி தெரிவித்த கருத்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
22 6381da0d60de3

பேன்டஸி கதைக்களங்களை தேர்வு செய்து இயக்கி வரும் சிம்புதேவன், விஜய்யை வைத்து புலி என்ற திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். இந்த திரைப்படம் குழந்தைகளை கவர்வதற்காக தனது மகன் மற்றும் மகளுக்காக விஜய் தேர்வு செய்து நடிக்க, படம் பெரிதாக போகவில்லை என்றாலும் பல சுட்டிஸ்களின் ஃபேவரைட் படமாகவும் அமைந்திருந்தது.

நிறைய அனிமேஷன் காட்சிகள் இந்த படத்தில் கவனம் பெற்றிருந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபல நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தான் கேமரா மேனாக பணியாற்றி இருந்தார். அப்போது இந்த படத்துக்கு இடையே நடந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “புலி திரைப்படம் ஒரு பேன்டஸி திரைப்படம். அந்த படத்திற்காக விஜய் காஸ்ட்யூம் அணிவதற்கே நேரம் எடுத்துக் கொள்ளும். அப்போது ஒரு முறை ஸ்ரீதேவியின் காட்சிகளை படம் எடுப்பதற்காக நாங்கள் லைட்டிங்கே செட் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது விஜய் சீக்கிரமாகவே செட்டிற்கு வந்து, அவரது ஷாட்டிற்காக காத்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் நான் லைட்டிங் செய்ததை பார்த்து என்னை அழைத்த விஜய், மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அதை பற்றி அவர் கேட்டு தெரிந்து கொண்டார். அதனை ஒரு புகைப்படமாக தனது ஃபோனில் எடுத்த விஜய், மனைவி சங்கீதாவிற்கு அனுப்பிவிட்டு ‘இவனுங்க ஏதோ பண்றாங்க. இன்ட்ரஸ்டிங்கா இருக்கு’ என அனுப்பிய மெசேஜை எனக்கு காண்பித்தார்” என நட்டி குறிப்பிட்டுள்ளார்.

Ajith V
Ajith V

நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.