தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காது

By Keerthana

Published:

சென்னை: தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் இனி எத்தனை முறை அலைந்தாலும் அனாதீன நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாது. ஏன் அனாதீன நிலத்திற்கு அரசு பட்டா தர மறுக்கிறது என்பதையும் , நிலம் வாங்குவோர் செய்யக்கூடாத தவறுகள் பற்றியும் பார்ப்போம்.

பட்டா இருக்கிறதா இல்லையா என்பதை பார்க்காமல், வெறும் பத்திரத்தை மட்டும் பார்த்து முடிவு செய்து விட்டு, நிலம் வாங்குவோர் எந்த வகையான நிலம் என்பது தெரியாமல் வாங்கி வீடு கட்டுகிறார்கள். அதனை அறிய வேண்டும் என்றால் விஏஓ அலுவலத்திற்கு போக வேண்டும். அங்குதான் அது எந்த வகையான நிலம் என்பதை அறிய முடியும். அனாதீனம், நீர்வழிப்பாதை, வண்டிப்பாதை, சாலையோரம் உள்பட பல்வேறு வகையான நிலங்களுக்கு பட்டா கிடைக்காது.

தமிழகத்தில் 1970களில் நகர்புறங்களில் ஏராளமான நிலத்தை சிலரே கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் 1978ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தினை கொண்டு வந்த மாநில அரசு, அதன் கீழ் உபரியாக 5883 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால் இந்த நிலங்களை அரசு முறையாக கட்டுப்பாட்டில் எடுத்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டதால், பழைய உரிமையாளர்கள், இந்நிலங்களை 1999க்கு பிறகு சட்டம் ரத்தானால் விற்பனை செய்துவிட்டார்கள்.

இதை வாங்கிய மக்கள், அதில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலங்களில் விறபனை தொடர்பான பத்திரங்கள் பதிவானாலும் பட்டா மாறுதல் செய்ய முடியாத நிலை இருக்கிறது. அனாதீன நிலங்களை பயன்படுத்தி வங்கிக்கடன் , கட்டட அனுமதி பெற முடியாது.

எனவே நிலம் வாங்கும் முன்பு சர்வே நம்பரை வைத்து அந்த நிலம், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலமா என்பதை அறிய வேண்டும். அப்படி செக் செய்யாமல் வாங்கியவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். land ceiling act அலுவலகம் சென்று சோதித்துவிட்டு முடிவு செய்வதே நல்லது.

அனாதீனம். வண்டிப்பாதை, நீர் நிலை, நீர் வழிப்பாதை, வாய்க்கால் , கோயில் நிலங்கள், அறநிலைத்துறை நிலங்கள் போன்ற நிலங்களுக்கு முன்பு பட்டா வழங்கிஇருந்தது. அப்படி பட்டா வாங்கியவர்களின் நிலங்களின் மதிப்பு இப்போது பூஜியம் என்று அரசு மாற்றி வைத்துள்ளது. எனவே பட்டா இருக்கிறது என்று நினைத்தும் இந்த இடங்களை வாங்கிவிட வேண்டாம். பட்டாவே இருந்தாலும் நிலம் என்ன வகை என்பதையும். இந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பை பூஜியமாக மதிப்பிட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்த பின்னர் நிலத்தை அல்லது வீட்டை வாங்குவது நல்லது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள்.