கமலின் பொன்விழா ஆண்டான 2009ல் ரஜினி பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அது இதுதான்.
கலைத்தாயிடம் நான் ஒருமுறை கேட்டேன். ஏம்மா எங்களை எல்லாம் கையைப் பிடிச்சி நடத்திட்டு வாரே? கமலை மட்டும் தோள்ல தூக்கி வச்சிக் கொண்டாடுற… நாங்களாம் உங்களுக்குப் பிள்ளையா இல்லையான்னு கேட்டேன்.
அதுக்கு கலைத்தாய் சொல்றாங்க. நீயாவது ஒரு ஜென்மத்துல தான் நடிகனாகணும்னு ஆசைப்பட்ட. ஆனா கமல் அப்படி இல்ல. ஒரு ஜென்மத்துல டேன்சர். இன்னொரு ஜென்மத்துல இயக்குனர். இன்னொரு ஜென்மத்துல மேக்கப் ஆர்டிஸ்ட்.
இன்னொரு ஜென்மத்துல நடிகன். அப்போ பத்து ஜென்மத்துக்கான பலன் அவர்கிட்ட இருக்குது. அதனால தான் அவரைத் தூக்கித் தோள்ல வச்சிருக்கிறேன். உங்களை எல்லாம் கையைப் பிடிச்சி நடத்திக்கிட்டு வர்றேன்… இதுதான் உண்மைன்னு அவங்க சொன்னாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமான விஷயம் இதுதான் என்றாராம் ரஜினி.
சிலைக்காக பீடம் செய்வார்கள். அந்தப் பீடத்துக்கு ஏற்ற மாதிரி தான் சிலை செய்ய முடியும். ஆனால் கமல் அப்படி கிடையாது. நீங்க எந்த பீடத்துல போய் கமலைக் கொண்டு நிறுத்தினாலும் கச்சிதமாகப் பொருந்துவார்.
ஆனா எனக்கு எல்லாம் அப்படி கிடையாது. எனக்கு ஒரு டிசைன் பண்ணனும். எனக்கு இதெல்லாம் கொண்டு வரணும். என் ரசிகர்கள் இதெல்லாம் விரும்புவாங்க. என் விநியோகஸ்தர்களுக்கு இதெல்லாம் வேணும்.
அதைத் தான் ஆடியன்ஸ்சும் விரும்புவாங்க. ஆனா கமல் அப்படி கிடையாது. திடீர்னு பார்த்தா 70 வயசு கிழவனாக நடிச்சிக்கிட்டு இருப்பார். அடுத்துப் பார்த்தா காலேஜ் ஸ்டூடண்டா நடிப்பாரு. எக்கச்சக்கமா பொறாமைப் பட்டவன் நான் தான்னு ரஜினியே அந்த மேடையில் பேசினாராம்.
கமலே ஒரு நிமிஷம் ஆச்சிரியப்பட்டுப் போனாராம். நிச்சயமா இது பொறாமையின் வெளிப்பாடு கிடையாது. ஆதங்கத்தின் வெளிப்பாடு. ரஜினி எந்தப் படத்தைப் பார்த்தாலும் அது பிடிச்சிருந்தா உடனே அவங்களைக் கூப்பிட்டுப் பாராட்டுவாராம்.
அது தான் இன்னைக்கும் அவரை சூப்பர்ஸ்டாராக தக்க வைத்துக் கொண்டு இருக்கிறதாம். இன்றைய 2கே கிட்ஸ்களுடன் ரஜினியும், கமலும் மிகச்சரியாக டிராவல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைய இளம் ஹீரோக்கள் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
அந்தப் பொன்விழா ஆண்டில் பேசி முடித்த ரஜினி மறுநாள் கமலுக்கு ஒரு கிப்ட் அனுப்புகிறார். அதில் கலைத்தாய் கமலை இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்கிறாள். மறுகையில் சிரஞ்சீவி, ரஜினி, மோகன்பாபு, மோகன்லால் எல்லாரையும் பிடித்தபடி நடக்கிற மாதிரி ஒரு சிலை. இதைக் கமல் ரொம்பவே ரசித்தாராம்.
மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.