எந்த ஒரு தொழிலையும் வித்தியாசமாக புதுமையான முறையில் செய்தால் மட்டுமே இன்றைய போட்டியான காலகட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் இளம்பெண் ஒருவர் பழைய துணிகளை விற்பனை செய்யும் இணையதளத்தை தொடங்கி மிகப்பெரிய பணக்காரி ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் ஹன்னா பெவிங்டன் என்பவர் தன்னிடம் ஏராளமான பழைய துணிகள் இருந்த நிலையில் அந்த துணிகள் ஒவ்வொன்றையும் புகைப்படம் எடுத்து தனக்கு சொந்தமான இணையதளத்தில் விற்பனைக்காக பதிவு செய்தார். அந்த துணிகள் உடனடியாக விற்பனை செய்யப்பட்டதை அடுத்து அவர் இதையே தன்னுடைய முழு நேர தொழிலாக மாற்றினால் என்ன என்று யோசித்தார்.
இதனை அடுத்து அவர் பழைய துணிகள் இருப்பவர்களிடம் இருந்து வாங்கி அந்த துணி தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்தார். துணிகளை விற்பனை செய்பவரிடம் இருந்து எந்த ஒரு கட்டணமும் வாங்காமல், துணிகளை வாங்குபவர்களிடம் இருந்து மட்டும் ஒரு சிறிய தொகையை அவர் கட்டணமாக பெற்றுக்கொண்டார்.
பழைய துணிகளின் தெளிவான புகைப்படம், துணிகளின் பிராண்ட், ஒரிஜினல் விலை மற்றும் சலுகை விலை ஆகியவற்றை அவர் தெளிவாக தனது வலைதளத்தில் பதிவு செய்தார். இதனை அடுத்து அவருக்கு தற்போது பிசினஸ் அமோகமாக நடைபெறுவதாகவும் மாதம் 6 லட்சத்திற்கு மேல் அவருக்கு வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்போது பழைய துணிகளை மட்டுமின்றி பழைய நகைகள், பழைய பொருட்களையும் செய்ய தொடங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி இந்த பிசினஸை வேறு யாரேனும் நடத்த விரும்பினால் அவர்களுக்கு தான் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் டிப்ஸ் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.