133 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆர்டரை டெலிவரி செய்யாத ஜொமைட்டோ நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு 133 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்தார். அந்த ஆர்டர் செய்த சில நிமிடங்களில் உங்களுக்கான உணவு டெலிவரி செய்யப்பட்டது என்று மெசேஜ் வந்தது.
ஆனால் தனக்கு யாரும் உணவை டெலிவரி செய்யவில்லை என்றும் தன்னுடைய உணவு இன்னும் தனக்கு வந்து சேரவில்லை என்றும் அவர் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாருக்கு ஜொமைட்டோ நிர்வாகத்திடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை, உணவும் டெலிவரி செய்யப்படவில்லை.
இதனை அடுத்து கன்ஸ்யூமர் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பில் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்யாத ஜொமைட்டோ நிறுவனத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.