how to get patta | உங்கள் வீடு, பட்டா உடன் புறம்போக்கும் சேர்த்து உள்ளதா.. பட்டா வாங்குவது எப்படி?

By Keerthana

Published:

சென்னை: how to get patta| தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலம், நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட அரசு நிலத்தை வீடு கட்டியவர்கள் பட்டா வாங்குவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

புறம்போக்கு நிலத்தில் நீங்கள் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசிக்கிறீர்களா, உங்கள் பட்டா நிலம் மட்டுமின்றி அரசு நிலத்துடனும் சேர்த்து உங்கள் வீட்டை ஆக்கிரமித்து கட்டி பல வருடமாக வசிக்கிறீர்களா.. இதற்கு பட்டா வாங்க முடியுமா? இதைபாருங்கள்,

தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து பல வருடங்களாக மக்கள் வசித்து வருகிறார்கள். ஆற்றின் கரையோரம்,. குளத்தின் கரையோரம், நீர் வழிப்பாதைகள் என பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த நிலத்தை வேறு இடத்திற்கு விற்கவும் செய்கிறார்கள். ஆனால் இப்போது அதுபோன்ற நிலங்களை பத்திரப்பதிவு கூட செய்ய முடியாது..

இந்த இடத்தை புறம்போக்கு நிலம் ஆகும் இந்த இடத்தை யாராவது வாங்கினால் அது ஆக்ரமணம் என்று அரசு அழைக்கும்.. அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என்று தான் தமிழக அரசு அழைத்து வருகிறது.

இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு இடங்கள் தற்காலிகமானதாகவோ அல்லது நிலையானதாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்காலும். ஆக்கிரமிக்கப்பட்டட அந்த இடத்தை அரசு ஆட்சேபனை அற்றவை என்று வகைபடுத்தி வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலங்கள் என்றால் மட்டும் அதற்கு பட்டா கேட்டு விண்ணப்பிக்க முடியும். வீடுகள் இல்லாத மக்கள் ஒப்படை பட்டா கேட்டு அரசிடம் மனு செய்யலாம். கிராமங்களை பொறுத்தவரை நத்தம் புறம்போக்கு நிலங்களுக்கு எளிதாக பட்டா வாங்கலாம்.

கிராம நத்தம் மனைகள் என்பது ஆட்சேபனை இல்லாத வகையாகவே பெரும்பாலும் இருக்கும். அதாவது கிராமங்களில் நீர் வழிப்பாதையை தவிர மற்ற பகுதிகளில் உள்ள எல்லாம் கிராம நத்தம் நிலம் என்ற வகையில் இருக்கும். இந்த நிலங்கள் கிராமங்களில் மக்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட இடங்கள் தான்..எனவே அங்கு பட்டா வாங்குவதில் பெரிய சிக்கல் இருக்காது. நீங்கள் உங்கள் இடத்திற்கான பட்டாவை ஆன்லைனிலேயே பெற முடியும்..

ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா வாங்குவது அவ்வளவு எளிதனாது அல்ல. பட்டா கொடுக்க முடியாது என்று அரசு கண்டிப்பாக சொல்லும் சென்னையை பொறுத்தவரை குறிப்பிட்ட பகுதிகளில் பட்டா வழங்க பல்வேறு விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்..

குடியிருப்புக்காக மட்டுமே ஆக்கிரமித்ததாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் நீர்வழிப்பாதை இல்லை, சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பு இல்லை , ஆட்சேபனை குரிய இடம் அல்ல வகைப்பாட்டில் நீங்கள் குடியிருக்கும் இடம் இருந்தால் மட்டுமே இந்த ஒப்படை பட்டா அரசு தரும். இல்லாவிட்டால் எத்தனை வருடம் குடியிருந்தாலும் பட்டா வாங்க முடியாது. சென்னையில் ஏரி பகுதிகளில் குடியிருப்போர் எந்த காலத்திலும் பட்டா வாங்குவது சாத்தியமே இல்லை.. எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீடு அல்லது கடைகள் இடிக்கப்படலாம்.

ஆட்சேபனையற்ற இடம் என்றால் பட்டா வழங்கும் போது குறிப்பிட்ட சதுர அடிக்கு மட்டும் இலவச பட்டா அரசு வழங்கும். அதை தாண்டி அதிகமாக இருப்பதற்கு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் அரசு விலை நிர்ணயித்து தொகை வசூலிக்கும் . ஆட்சேபனை அற்ற நிலங்களின் வகைகள் என்னென்ன.. நந்தவனம், அனாதீனம், தண்ணீர் பந்தல், மண்டபம், மானாவாரி தரிசு, சர்வே செய்யப்படாத இடங்கள், சாவடி, நத்தம், கலவை, தோப்பு, கல்லாங்குத்து, காடு/பாறை, மலை, கல்லாங்குத்து, மைதானம், திடல், வெட்டுகுழி. தீர்வை விதிக்க பட்ட மானாவாரி தரிசு, போன்ற ஆட்சேபனை அற்ற அரசு நிலங்களில் குடியிருப்போர் பட்டா வாங்க முடியும்.

அதேநேரம் தெரு, மயானம்/ சுடுகாடு, கோவில், சாலை, மற்றும் நீர்வழிப்பாதை நிலங்களில் எந்தகாலத்திலும் பட்டா கிடைக்காது. எந்த அரசு வந்தாலும் நீர்வழிப்பாதையில் குடியிருப்போருக்கு பட்டா வழங்காது. இப்போது நீர்வழிப்பாதை நிலங்கள், அரசு நிலங்கள், இந்து அறநிலையத்துறை நிலங்கள் ஆகியவை பத்திரம் பதிவது கிடையாது. அந்த நிலங்களை கண்டுபிடித்த அரசு புதிதாக யாருக்கும் பத்திரப்பதிவு செய்ய அனுமதிப்பது இல்லை.