சினிமாவிற்குள் வந்துட்டீங்க அப்படினா தயவுசெய்து இதைப் பண்ணாதீங்க… கிரண் அட்வைஸ்…

கிரண் ரத்தோட் ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்தவர். மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் கலைப் பட்டம் பெற்றவர். கல்லூரி படிப்பை முடித்த பின்பு மாடெல்லிங் செய்ய ஆரம்பித்தார். ஒரு சில இந்தி பாப் ஆல்பத்திலும் பணியாற்றினார் கிரண் ரத்தோட்.

கிரண் ரத்தோட் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாவார். 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று முதல் படத்தினாலேயே பிரபலமானார் கிரண்.

முதல் படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிரணை தேடி வந்தன. அடுத்தாக அஜித் அவர்களுக்கு ஜோடியாக ‘வில்லன்’ படத்தில் நடித்திருந்தார் கிரண். இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து கமலஹாசனுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, பிரஷாந்த்க்கு ஜோடியாக ‘வின்னர்’ போன்ற முன்னணி நடிகர்களுடன் வெற்றிப் படங்களில் நடித்தார் கிரண். இது தவிர பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும், ஹீரோவுடனான பாடல்களிலும் தோன்றியுள்ளார் கிரண்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட கிரண் ரத்தோட் சினிமாவில் தான் செய்த தவறை பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், ‘கில்லி’ திரைப்படத்தில் த்ரிஷா ரோலில் நடிக்க முதலில் எனக்குதான் வாய்ப்பு வந்தது. அப்போது நான் காதலில் இருந்ததால் நிராகரித்து விட்டேன். இது போன்ற பல நல்ல படங்களை நான் காதலித்து கொண்டிருந்ததால் தவற விட்டுவிட்டேன். அதனால் புதிதாக சினிமாவிற்குள் வருபவர்கள் தயவுசெய்து காதலிக்காதீர்கள். முதலில் சின்சியராக வாய்ப்புகளை தேடி பிடித்து நடியுங்கள், பின்னர் காதலியுங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளார் கிரண் ரத்தோட்.