ஷங்கர் படத்துல பாடல்கள் பெருசா ஹிட்டாக காரணம் இதான்.. வாலி உடைத்த சீக்ரெட்.. உண்மையாவே அவரு பிரம்மாண்டம் தான்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அறியப்படுபவர் தான் ஷங்கர். ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஷங்கர், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் உருவான அனைத்து படங்களும் மிகப்பெரிய ஹிட்டாகி இருந்ததுடன் மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரையும் எடுத்துள்ளது.

ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களையும் வைத்து சிவாஜி, எந்திரன், இந்தியன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களையும் உருவாக்கி உள்ளார். கடைசியாக ஐ, 2.0 உள்ளிட்ட திரைப்படங்களை ஷங்கர் இயக்க, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியன் 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் இதில் இந்தியன் தாத்தாவாக நடித்துள்ளார்.

அவருடன் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்டவை மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ஷங்கரின் படங்கள் என்றாலே அதில் வரும் பாடல்கள் அல்லது வேறு காட்சிகள் மிக பிரம்மாண்டம் நிறைந்ததாக இருக்கும். அதற்கேற்ப பாடல் வரிகளும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தும் வருகிறது.

தனது திரைப்படங்களில் திரைக்கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதே அளவுக்கு பாடல் காட்சிகளிலும் பார்த்து பார்த்து தயார் செய்யும் ஷங்கர், முடிந்த அளவுக்கு சிறந்த இசையை இசையமைப்பாளர்களிடம் வாங்கவும் முயற்சிப்பார்.

அப்படி ஒரு சூழலில் இயக்குனர் ஷங்கர் பற்றி மறைந்த கவிஞர் வாலி தெரிவித்த கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது . “ஷங்கருடைய படங்களில் பாடல்கள் பெரிய ஹிட்டாவதற்கு காரணம் படத்திற்காக பிரம்மாண்ட செட் போட்டு விட்டார் என்பதற்காக பாடல் வரிகளை கேட்க மாட்டார். அவர்கள் இரண்டு நாட்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை. பாடல் மெதுவாக போதும் என்று ஷங்கர் கூறுவானே தவிர நடிகர்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள், பாடலை கொடுங்கள் என்று அவசரப்படுத்த மாட்டான்.

அப்படி ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்தது. பாம்பேயில் இருந்து நூறு நடன கலைஞர்கள் ஜெய்ப்பூரில் தங்கி இருந்தனர். அந்த சமயத்தில் நான் பல்லவி எழுதி இங்கே சென்னையில் கொடுத்து விட்டால் ரஹ்மான் மியூசிக் செய்து ஜெய்ப்பூர் அனுப்பி விடுவார். ஆனால் அந்த பாடலின் பல்லவிக்காக வரிகள் எதுவும் எனக்கு சிக்கவில்லை. அந்த பாடலுக்காக மூன்று நாட்கள் அனைத்து நடன கலைஞர்களும் தங்கி இருந்து காத்திருந்து மூன்றாவது நாளில் தான் நான் வரிகள் எழுதினேன்.

அப்போது அதில் உடம்பை போல மாறிக்கொண்டே இருப்பது போன்ற காட்சி வரும் என்பதால் அந்த மந்திரம் தந்திரங்களை உடைய வரிகளை எழுதி ‘மாயா மச்சிந்திரா’ என இந்தியன் படத்தில் அந்த பாடலை எழுதியிருந்தேன். நடுவில் மந்திரி, தந்திரி உள்ளிட்ட வார்த்தைகளும் வர அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகி இருந்தது” என ஷங்கரை பாராட்டி வாலி குறிப்பிட்டுள்ளார்.