விஜயின் இந்தப் படத்தை நான் பண்ணியிருக்க வேண்டியது… பார்த்திபன் பகிர்வு…

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தமிழ் மொழியின் மீது அதீத பற்றினை கொண்டவர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்டவர் பார்த்திபன்.

ஆரம்பத்தில் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதே நேரத்தில் பல்வேறு கலைஞர்களுக்கு சினிமாவில் டப்பிங் பேசி வந்தார். 1981 ஆம் ஆண்டு ‘ராணுவ வீரன்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி சினிமாவில் நடிகராக அறிமுகமானார் பார்த்திபன்.

பின்னர் 1984 ஆம் ஆண்டு கே. பாக்கியராஜ் அவர்கள் இயக்கி நடித்த ‘தாவணி கனவுகள்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் பார்த்திபன். 1989 ஆம் ஆண்டு ‘புதிய பாடம்’ திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வேற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

பார்த்திபன் இயக்கிய முதல் படம் ‘புதிய பாடம்’ தேசிய திரைப்பட விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்கியும் நடித்தும் பிரபலமானவர். இவரின் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கும் தமிழுக்காகவே ரசிகர்களைக் கொண்டவர்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட பார்த்திபன், 3 idiots படத்தை தமிழில் நண்பன் என ரீமேக் செய்ய முடிவு எடுத்த பின்பு விஜய் என்னைத்தான் அந்த படத்தை பண்ண சொன்னார். பின்னர் யாரோ ஷங்கர் பெயரை பரிந்துரைக்க அது அப்படியே போய்டுச்சு. ஆனால் இப்போவும் SAC சார் நண்பன் படத்தை நீ பண்ணியிருந்தா பிரபுதேவா விஜயை வைத்து போக்கிரி படம் பண்ண மாதிரி நல்லா இருந்திருக்கும் என்று சொல்லுவார் என்று பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.