7th Pay Commission: பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு பல வருட ஏக்கம்.. மத்திய அரசு சூப்பர் முடிவு

By Keerthana

Published:

டெல்லி: பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா வராதா என்று ஏங்காத அரசு ஊழியர்களே இல்லை.. இந்த சூழலில் பென்சன் பணத்தை எடுப்பதில் விதிகளை மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ள. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபற்றி குழு அமைத்துள்ள அரசு அதுபற்றி ஆலோசித்து வருகிறது. அதேநேரம் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற போகிறார்களாம்.

இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாம். தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற போவதாக சொல்கிறார்கள்.

அடுத்ததாக இன்னொரு முக்கியமான விஷயம் நடந்து வருகிறது. தற்போது மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் படி அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் 15 வருடம் வேலை பார்த்தால் மட்டுமே பென்சன் பணத்தில் 40 சதவிகிதத்திற்குள் எடுக்க முடியும். இதை 12 வருடங்களாக குறைக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மத்திய அரசு இதற்கான ஆலோசனையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மையில் ஜே.சி.எம் சார்பாக அதன் தலைவர் சிவ கோபால் மிஸ்ரா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கி, 14 கோரிக்கைகளை கூறியிருந்தார். அதில் முக்கியமான கோரிக்கை என்றால். மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள 15 ஆண்டுகள் என்று கட்டுப்பாட்டில் இருந்து 12 ஆண்டுகளாக ஓய்வூதியம் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பது தான்.இதுபற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக சொல்கிறார்கள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆக இருக்கும்.