இதைப் பண்ணினா தான் நான் ஜெயிச்சதா அர்த்தம்னு இல்லை… இயக்குனர் ராம் பகிர்வு…

ராமசுப்ரமணியம் என்கிற ராம் தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றுபவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும் சென்னை கிறித்துவ கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றவர். இயக்குனர் தங்கர் பச்சானிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராம்.

தமிழில் மட்டுமல்லாமல் ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலாணி ஆகிய இந்தி திரைப்பட இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ராம். 2007 ஆம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

‘கற்றது தமிழ்’ படத்தில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர். இப்படம் வணீக ரீதியாக வெற்றியடையாவிட்டாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஜீவா மற்றும் அஞ்சலிக்கு இப்படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்து அவர்கள் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது.

அடுத்ததாக 2013 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் ‘தங்க மீன்கள்’ படத்தை இயக்கினார் ராம். இப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. தொடர்ந்து தரமணி (2017), சவரகத்தி (2018), பேரன்பு (2019), சைக்கோ (2020) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் ராம்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராம், நான் கற்றது தமிழ் படத்தை எடுத்த பின்பு நல்லா தான் இருக்கிறேன், காரில் செல்வதற்கு என்னிடம் காரோ பணமோ இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னிடம் பைக்கில் செல்லும் அளவிற்கு என்னிடம் பணம் இருக்கிறது. கார் வாங்கி அதில் சென்றால் தான் நான் ஜெயிச்சிட்டேன்னு அர்த்தம் இல்லை, உண்மையில் என் கையில் இப்போ 10 கோடி கிடைத்தால் அதை என்ன செய்ய வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது என்று பேசியுள்ளார் இயக்குனர் ராம்.