இதை சாப்பிடுறேனு சொல்றதுக்கு எனக்கு தயக்கம் இல்லை… அது அவ்ளோ பெரிய விஷயம் இல்லை… துஷரா விஜயன் பகிர்வு…

திண்டுக்கல்லில் பிறந்து வளர்ந்தவர் நடிகை துஷரா விஜயன். பொறியியல் படிப்பை முடித்த பின்பு பேஷன் டிசைனிங் படிப்பையும் மாடலிங்கையும் செய்து வந்தார். நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார் துஷரா விஜயன்.

2019 ஆம் ஆண்டு புதுமுகங்கள் இணைந்து தயாரித்த ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு பா. ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து பிரபலமானார் துஷரா விஜயன்.

1970களில் நடக்கும் கதையாக தயாரித்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கரடு முரடான பெண்ணாக நடித்திருப்பார் துஷரா. இப்படத்திற்காக வடசென்னை பாஷையை கற்றுக் கொண்டார் துஷரா. இப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘அன்புள்ள கில்லி’, ‘கழுவேத்தி மூர்கன்’, ‘அநீதி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் துஷரா விஜயன். தற்போது தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் துஷரா. இப்படம் வெளிவர தயாராக உள்ளது. எந்த கதாபாத்திரம் ஆனாலும் தனது முழு உழைப்பையும் தந்து அபாரமான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகை துஷரா விஜயன்.

‘ராயன்’ பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் நேர்காணலில் கலந்துக் கொண்ட துஷரா விஜயன் பீப் சாப்பிடுவது பற்றி பேசியுள்ளர். அவர் கூறியது என்னவென்றால், சிக்கன் சாப்பிடுவது போல தான் நான் பீப் சாப்பிடுகிறேன். அதில் எந்த வேறுபாடும் இல்லை, இதை சாப்பிடுகிறேன் என்று சொல்வதற்கு எனக்கு தயக்கமும் இல்லை என்று பேசியுள்ளார் துஷரா விஜயன்.