பாக்கியராஜிக்கு பாரதிராஜா வைத்த டெஸ்ட்…! மனுஷன் முதல் படத்திலேயே பின்னிட்டாரே..!

By Sankar Velu

Published:

குரு வைக்கிற சோதனைகள் எல்லாமே சிஷ்யனை சாதனையாளனாக்கத் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் எத்தகைய இடைஞ்சல்கள் வந்தாலும், அதை எல்லாம் எளிதில் தாண்டி வெற்றி நடை போட முடியும்.

அந்த வகையில் வாய்ப்புகள் வருவதே பெரிய விஷயம். வருகின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவன் புத்திசாலி. எல்லாருக்கும் அது போன்ற வாய்ப்புகள் வருவதுண்டு. சிலர் அதைப் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

அது கைநழுவி போனதும், ‘அய்யய்யோ நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேனே…’ என புலம்பித் தவிப்பர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஒரு சூப்பரான சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இங்கு வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டான் சிஷ்யன். வாங்க என்னன்னு பார்ப்போம்.

பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து பல உதவி இயக்குனர்கள் வெளியே வந்து படம் இயக்கி பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும் அவரது பட்டறையில் இருந்து முதலில் வெளியே வந்து இயக்குனராகி தனி முத்திரையைப் பதித்தவர் பாக்கியராஜ்.

அவருக்கும் பாரதிராஜாவுக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் வந்தபோதும் இன்று வரை அவர் மீது நேசம் வைத்திருப்பவர் பாக்கியராஜ்.

அவர் பாரதிராஜாவிடம் சேர்ந்ததே தனி கதை. ‘கோயம்புத்தூர்ல இருந்து ராஜன்னு ஒரு பையன் இருக்கான். அவன் உங்கக்கிட்ட உதவி இயக்குனரா சேரணும்னு ரொம்ப ஆசைப்படறான்’னு பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்த பாலகுரு அவரிடம் சொன்னார்.

16 Vayathinile
16 Vayathinile

ஆனால் பாரதிராஜா அதை மறந்து விட்டார். ஒருநாள் பாக்கியராஜ் அங்கு வந்த பாரதிராஜாவிடமே பாலகுரு இருக்கிறாரா என கேட்டார். ‘அவர் வெளியே போயிருக்காரு. நீ யாரு..?’ன்னு பாரதிராஜா கேட்டார். ‘இல்ல என்னை பாரதிராஜாவிடம் சேர்த்து விடறேன்’னு சொன்னாரு.

என்ன காரணத்தாலோ முதல் சந்திப்பிலேயே பாரதிராஜாவுக்கு பாக்கியராஜைப் பிடித்துவிட்டது. நாளைல இருந்து சேர்ந்துரு. நான் தான் பாரதிராஜான்னு சொல்லி அவரை அனுப்பி வைத்தார். பாக்கியராஜை ‘ராஜன்’னு தான் நான் கூப்பிடுவேன். அவரோட இன்டலிஜென்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது.

16 வயதினிலே படத்திற்கு வசனம் எழுதியவர் கலைமணி தான். என்றாலும் பாக்கியராஜின் திறமையை சோதிச்சிப் பார்க்கறதுக்காகவே 16 வயதினிலே படத்துக்கு ஒரு சில காட்சிகளுக்கு வசனம் எழுதுற பொறுப்பை அவரிடம் கொடுத்தேன்.

அவர் எழுதிக்கொடுத்தது எல்லாமே மிகச்சிறப்பா இருந்தது. அதனால அவர் எழுதிய பல வசனங்களை அந்தப் படத்துல நான் பயன்படுத்தினேன் என பாரதிராஜா சொன்னாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.