பஞ்ச தந்திரம் படத்துல இதெல்லாம் நோட் பன்னிருக்கீங்களா? படம் முழுக்க வரும் 5 குறியீடு

By John A

Published:

உலக நாயகன் கமல்ஹாசனின் எவ்வளவு சீரியசான திரைப்படத்திலும் மெல்லிய நகைச்சுவை படம் முழுக்க இழையோடிக் கொண்டே இருக்கும். இவரும் கிரேஸி மோகனும் சேர்ந்து செய்யாத காமெடி கலாட்டாவே கிடையாது.

மைக்கேல் மதன காமராசன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, பம்மல் கே.சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தெனாலி, மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு, அவ்வை சண்முகி போன்ற பல படங்கள் கமல்ஹாசனின் மறைமுகமான நகைச்சுவையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முழுநீள டார்க் காமெடி திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் தான் பஞ்ச தந்திரம். கமல்ஹாசனுடன் ரமேஷ் அர்விந்த், ஜெய்ராம், யூகி சேது, ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருப்பர். 2002-ல் வெளியான இத்திரைப்படம் வெளியான போது பெரிதும் வெற்றி பெறவில்லை.

ஆனால் நாட்கள் போகப் போக அன்பே சிவம் எப்படி கொண்டாடப்பட்டதோ அதேபோல் தற்போது பஞ்சதந்திரம் படமும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் முழுக்க காட்சிக்குக் காட்சி நகைச்சுவை கலாட்டாவே நடந்திருக்கும். ஒருமுறைக்கு இருமுறை வசனத்தைக் கூர்ந்து கவனித்தால் தெரியாத அர்த்தங்கள் பல புலப்படும்.

வடிவேலுவை உண்மையாகவே பொளந்து கட்டிய கோவை சரளா.. மாயி படத்தில் பஞ்ச் வைத்த சம்பவம்

ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த பஞ்ச தந்திரம் படத்தினை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். தேவா இசையமைத்திருந்தார். இப்படி படம் முழுக்க ஒரு சிரிப்பு பட்டிமன்றமே இப்படத்தில் நடித்திருக்கும் ஸாரி நடத்தியிருக்கும் பஞ்சதந்திரம் படத்தில் மற்றொரு விஷயமும் மிகவும் கவனிக்க வைக்கிறது. ஆம் படத்தில் கமல் மற்றும் ஐவர் கூட்டணியுடன் நாகேஷ் செய்யும் லூட்டிகள் தான். மேலும் படத்தில் தலைப்புக்கு ஏற்றாற் போல பல இடங்களில் ஐந்து என்ற குறியீடு காட்டப்பட்டிருக்கும்.

அந்த வகையில் கமல் கூட்டணி பயணம் செய்யும் காரின் எண் ஐந்து என்றும், அவர் ஹோட்டலில் தங்கியிருக்கும் அறை எண் 555 என்றும், ஹோட்டல் அறையில் லிப்ஃடில் பயணம் செய்யும் போது 5 வது தளம் என்றும் பல இடங்கில் 5 என்று காட்டப்பட்டிருக்கும்.

இப்போது அரசியல்,மதக் குறியீடுகளை வைத்து சினிமா எடுக்கும் பாணியை 20 வருடங்களுக்கு முன்னரே கமல்ஹாசன் தனது படத்தில் படத்தின் தலைப்பையே குறியீடுகளாக்கி வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. உலக நாயகன் என்றால் சும்மாவா..!