நள்ளிரவு 1.30 மணி.. ஓடும் ரயிலில் திடீரென முணுமுணுத்த ஆச்சி மனோரமா.. ஷாக் ஆன நடிகை லட்சுமி

இந்திய சினிமாவில 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஆச்சி மனோரமா. மாலையிட்ட மங்கை படத்தில் கண்ணதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னாளில் 5…

Manorama

இந்திய சினிமாவில 1500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஆச்சி மனோரமா. மாலையிட்ட மங்கை படத்தில் கண்ணதாசனால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னாளில் 5 முதல்வர்களுடன் நடித்து, 5 தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக் குரியவர் ஆச்சி மனோரமா.

ஆச்சி மனோரமாவின் நடிக்க வைக்காத இயக்குநர்களே இல்லை. அதேபோல் ஆச்சி மனோரமா இருந்தாலே அந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக அமையும் எனவும் ஓர் நம்பிக்கை. அந்த அளவிற்கு திரைத்துறையில் பல அளப்பரிய பங்கைச் செய்தவர்.

ஆச்சி மனோரமாவின் உழைப்பைப் பற்றி நடிகை லட்சுமி கூறுகையில், ஒருமுறை வெளியூர் ஷுட்டிங்குக்காக ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது ரயிலில் அனைவரும் ஒரே கோச்சில் பயணிக்க ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1.30 மணி தாண்டியது. அந்த நேரத்தில் ஏதோ ஒரு பாட்டுச் சத்தம் கேட்டிருக்கிறது. நடிகை லட்சுமி கண்விழித்துப் பார்க்கும்போது மனோரமா ஏதோ பாட்டை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம்.

என்னவென்று விசாரிக்க மறுநாள் ஷுட்டிங்கில் அவர் சம்பந்தப்பட்ட காட்சியில் வசனத்திற்கு இடையே ஏதோ பாடல் ஒன்றைப் பாட வேண்டுமாம் அதற்காக அதனை படித்து மனப்பாடம் செய்து கொண்டிருந்தாராம் மனோரமா. அந்த அளவிற்கு இவரின் உழைப்பு இருக்குமாம்.

பஞ்ச தந்திரம் படத்துல இதெல்லாம் நோட் பன்னிருக்கீங்களா? படம் முழுக்க வரும் 5 குறியீடு

மேலும் திரைப்படங்களில் நடிக்கும் போது எந்த உடையலங்காரத்தில் இருக்கிறாரோ அதே அலங்காரத்தில்தான் வீட்டுக்குச் செல்வாராம். சாதாரணமாக ஷுட்டிங் முடிந்தவுடன் பேக்கப் சொல்லிவிட்டு மேக்கப்பை கலைத்துவிடும் நடிகர், நடிகையருக்கு மத்தியில் அதே அலங்காரத்துடன் வலம்வரும் மனோரமாவுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்றும் கூட.

தனது வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த போது மெல்ல சரியாகி வந்திருக்கிறார். அப்போது இயக்குநர் ஹரி தனது படத்தில் ஒருகாட்சியில் மனோரமாவை நடிக்க அழைக்க, அந்த நிலையிலும் இரண்டு நாட்கள் ஷுட்டிங்கில் கலந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் ஆச்சி மனோரமா. இவ்வாறு தனது வாழ்க்கையை சினிமாவிற்காகவே அர்ப்பணித்து தனதுஇறுதி மூச்சு வரை நடித்துக் கொண்டிருந்தவர்தான் ஆச்சி மனோரமா.