வடிவேலுவை உண்மையாகவே பொளந்து கட்டிய கோவை சரளா.. மாயி படத்தில் பஞ்ச் வைத்த சம்பவம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஜோடிப் பொருத்தங்களாக பல ஹீரோ ஹீரோயின்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா, சிவாஜிகணேசன் – பத்மினி, கமல் – ஸ்ரீதேவி, ரஜினி – ஸ்ரீபிரியா பழங்காலத்து நடிகர்கள் முதல் இந்தக் காலத்து நடிகர்கள் வரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காமெடியில் சில ஜோடி மட்டுமே இணைந்து நடித்து ரசிர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர்கள்.

பழைய சினிமா படங்களில் என்.எஸ்.கலைவாணர்-மதுரம், நாகேஷ்-மனோராமா ஆகிய ஜோடிகள் காமெடியிலும் ரசிக்க வைத்தன. அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜோடி ரசிகர்களை சிரிக்க வைத்து வயிற்றைப் புண்ணாக்கியது. அந்த ஜோடிதான் வடிவேலு -கோவை சரளா ஜோடி.

90 களின் ஆரம்பத்தில் சினிமாத் துறைக்கு என்ட்ரி கொடுத்த வடிவேலுவை இயக்குநர் வி.சேகர் மிடில்கிளாஸ் குடும்ப பாங்கான படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வைக்க அப்போது தான் பிரபலமானார். காலம் மாறிப்போச்சு, வரவு எட்டணா செலவு பத்தனா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற படங்கள் வடிவேலுவை சினிமாவில் நிலை நிறுத்திய படங்கள்.

மேற்கண்ட படங்களில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தவர் கோவை சரளா. ஆரம்ப கால கட்டங்களில் வடிவேலுவுடன் நடிக்க மறுத்த கோவை சரளா பின் இயக்குநர் வி.சேகர் வற்புறுத்தலின் பேரில் நடிக்க ஆரம்பித்தார். இந்த ஜோடியை தமிழக மக்கள் வெகுவாக ரசிக்க பல படங்களில் இணைந்து நடிக்கத் தொடங்கினர்.

இவர்களது கூட்டணி இருந்தாலே படம் மினிமம் கியாரண்டி வெற்றிக்குச் சமம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் எல்லாம் வடிவேலு அடி வாங்காத படங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இருவரும் தங்களது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தனர். அப்படி வடிவேலு அடி வாங்கிய படம் தான் மாயி. மாயி படத்தில் கோவை சரளாவை விரட்டி விரட்டி காதலிக்கும் முறைமாமன் கதாபாத்திரத்தில் படம் முழுக்க வடிவேலுவின் ஆட்சியே இருக்கும்.

இயக்குநர் என அடையாளம் தெரியாமலே வாய்ப்புக் கேட்ட சூரி.. புரோட்டா சூரி ஆனது இப்படித்தான்..

சாதாரணமாகவே வடிவேலுவை அடித்து, உதைத்து துவம்சம் செய்யும் கோவை சரளா மாயி படத்தில் சற்று அதிகமாகவே வெளுத்து வாங்குவார். அப்படி இருக்கையில் ஒருமுறை மாயி பட ஷுட்டிங்கின் போது வடிவேலுவைக் ஓங்கி குத்துவது போல் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் வடிவேலுவை உண்மையாகவே அடித்துவிட்டாராம் கோவை சரளா.

இது குறித்து வடிவேலு கோவை சரளாவிடம் அவர் மிகவும் சங்கடப்பட்டிருக்கிறார். பின் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மீண்டும் நடித்திருக்கிறார். இது தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் கோவை சரளா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...