சினிமாவில் எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் அவர்களுக்கும் சறுக்கல் இருக்கத்தான் செய்யும். படத்தின் செலவு தொகையில் பாதிக்கும் மேல் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு உச்ச நடிகர்கள் நடிப்பதோடு மட்டும் நின்று விடுகின்றனர். ஆனால் அதை தயாரித்த தயாரிப்பாளர்கள் நிலைமை படம் தோல்வியடைந்தால் பரிதாபம் தான். தமிழ் சினிமாவின் உச்ச நாயகனான ரஜினிக்கும் இந்த நிலைமை ஒரு முறை அல்ல.. இருமுறை வந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தோல்வி அடைந்த ஒரு படத்திற்கு நஷ்டத்தை வெளிப்படையாக திருப்பி கொடுத்த முதல் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. பாபா வெளியாகி படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தபோது படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரிய நஷ்டத்தை சந்தித்தனர்.
அதனை, அறிந்த ரஜினி அப்போது தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருந்த திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்து நஷ்ட விவர கணக்கினை கேட்டுட்டார்.
பின்பு, நஷ்டத் தொகையை அவரே மனிதாபிமான அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு திருப்பி கொடுத்தார்.
அப்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் அதை வரவேற்கவில்லை.
ஏன் கமல்ஹாசன் அவர்களே அதை எதிர்த்தார். நீங்கள் ஒருவர் கொடுப்பதால் மற்றவர்கள் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்றார். ஆனால் சூப்பர் ஸ்டாரோ இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. தன்னால் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த செயலைச் செய்தார்.
தாய்ப்பாசம்ன்னா என்னான்னே தெரியாத கேப்டன் விஜயகாந்த்… தாய்க்குத் தாயான பிரேமலதா!
இதே போலத்தான் குசேலன் படமும். ஆனால் படத்தை தயாரித்து அவர் கிடையாது. அவர் நடிகர் மட்டுமே. படத்தின் வியாபாரத்தை செய்தது தயாரிப்பாளர்கள். இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் குசேலன் படத்தை தயாரித்தது ரஜினியின் குருநாதர் பாலச்சந்தர்.
ரஜினி படம் பூஜையின் போதே சொன்னார். நான் படத்தின் நாயகன் கிடையாது. பசுபதி தான் படத்தின் நாயகன் நான் வெறும் கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறேன் என்று. ஆனால் ரஜினியை படத்தின் நாயகன் போல விளம்பரப்படுத்தி படத்தை அதிக விலைக்கு விற்றார்கள்.
ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சென்னைக்கு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து லுங்கியுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனைய அறிந்த ரஜினியே பொறுப்பேற்று ஒரு குறிப்பிட்ட நஷ்ட தொகையை திரும்பக் கொடுத்தார். லிங்கா படத்திற்கும் இந்த நிலைமை தான்.