தாய்ப்பாசம்ன்னா என்னான்னே தெரியாத கேப்டன் விஜயகாந்த்… தாய்க்குத் தாயான பிரேமலதா!

இன்று கோடிக்கணக்கான மக்கள் உள்ளத்தில் பசி என்னும் நோயை அகற்றி தன்னை நாடி வருவோருக்கு தாயைப் போன்று பாசத்தால் அன்னம் புகட்டி அழகு பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரின் இந்த கொடைத் தன்மைக்கு சாட்சிதான் அவர் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டம். தாயைப் போன்று பசி ஆற்றியவர் ஆனால் சிறுவயதிலிலேயே தன் தாயை இழந்து விட்டார்.

கேப்டன் விஜயகாந்த்துக்கு தாய்க்கு தாயாகவும், மனைவியாகவும் இருந்து வழிநடத்தியவர் பிரேமலதா. பேட்டி ஒன்றில் அவர்கூறும் போது, “கேப்டன் விஜயகாந்த்துக்கு சிறுவயதிலிலேயே தாயை இழந்து விட்டதால் தாய்ப்பாசம் கிடையாது. அவரது இளமைக் காலத்தில் தாயின் அன்பைப் பெற்றது கிடையாது. திருமணத்திற்குப் பின் அவருக்குத் தாய்க்குத் தாயாக இருந்து கவனித்து வந்தேன். என்னை மனைவிக்கு அப்பாற்பட்டு ஒரு தாயாகத்தான் என்னை பாவித்து வந்தார்.

அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது நள்ளிரவில் வீடு திரும்பினாலும் சுடச்சுட உணவினைப் பரிமாறுவேன். என் கையால் தான் கேப்டனுக்கு பல நாட்கள் உணவினை ஊட்டி விட்டேன். இதை அவர் மிகவும் விரும்புவார். அவர் மன நிறைவாக உண்டு உறங்குவதை பார்த்து பார்த்து ரசித்தவள் நான்.  இன்றைய தலைமுறையினர் இதை கற்றுக் கொள்ள வேண்டும்.“ இவ்வாறு அந்தப் பேட்டியில் பிரேமலதா கூறியுள்ளார்.

அஜீத்தால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்த நாயகி.. நடிச்ச படமெல்லாம் ஹிட் தான்

சமீபத்தில் அவர் இறந்த போது கூட அவரை அடக்கம் செய்த பின் பிரேமலதா அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் போது பேசுகையில் கேப்டன் விஜயகாந்த்துக்கே உரிய வள்ளல் தன்மை, பசி ஆற்றும் குணம் போன்றவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்கும் நோக்கில் வெகு விரைவில் அவரது சமாதி அருகே இல்லையென்று வரும் வறியவர்களுக்கு அன்னம் பரிமாறும் திட்டம் தொடங்க இருப்பதாக பிரேமலதா கூறியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும்  மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களுக்கு ஒப்பாக கேப்டன் விஜயகாந்துக்கும் நினைவிடம் எழுப்பி அதில் அணையா விளக்கு ஒன்றையும் வைக்கப் போவதாக பிரேமலதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.