தமிழ் சினிமாவில் 80ஸ்,90ஸ்களில் தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர் கார்த்திக். இவரது நடிப்பிற்காகவே மக்கள் இவரை நவரச நாயகன் என அழைத்தனர். அந்த அளவு பலவித குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியவர்.
மெளன ராகம், பிஸ்தா போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் மக்கள் மனதை கொள்ளையடித்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை. இப்படத்திற்கு இவர் பாரதிராஜாவிடமோ வெறு யாரிடமோ வாய்ப்பு தேடி போகவில்லையாம்.
இப்படத்திற்காக கதாநாயகனை தேடி முதலில் படக்குழு அழைந்துள்ளது. பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனை முதலில் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் பாரதிராஜாவிடம் அந்த நேரத்தில் உதவி இயக்குனராய் இருந்த சித்ரா லட்சுமணனுக்கு அதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. அதை பாரதிராஜாவிடம் கூறியுள்ளார். அவரும் அவரின் சொல்லை கேட்டுள்ளார்.
பின்னர் மறுநாள் அட்லாண்டிக் ஹோட்டலில் காஃபி குடித்துவிட்டு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஒரு சிறுவன் மீது கார் இடித்துவிட அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அந்த சிறுவனை திரும்பவும் அந்த ஹோட்டலில் விடுவதற்காக சென்றுள்ளனர்.
அஜீத், விஜய் இணைந்து நடித்த இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்காததற்கு இதுதான் காரணமா…?!
அப்போது நடிகர் முத்துராமனின் வீட்டை கடந்து சென்றபோது அங்கு கார்த்திக் பேட்மிண்டன் விளையாடிகொண்டிருந்தாராம். அவரை பாரதிராஜா பார்த்து கொண்டே இருக்க இவரை நமது படத்திற்கு கதாநாயகனாக தேர்ந்தெடுக்கலாம் என தீர்மானித்துவிட்டாராம்.
பின்னர் அவர்கள் இருவரும் முத்துராமனிடம் போய் பேசி கார்த்திக்கை தனது படத்தில் நடிக்க அழைத்துள்ளனர். அதை கேட்டதும் முத்துராமன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாராம். பின்னர் அப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் கார்த்திக்குக்கு அப்படத்தி தெலுங்கு பதிப்பிலும் நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.