அஜீத், விஜய் இணைந்து நடித்த இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்காததற்கு இதுதான் காரணமா…?!

தியாகராஜ பாகவதர் – பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் ஆகியோருக்குப் பிறகு தமிழ்சினிமாவில் கொடிகட்டிப் பறந்து வரும் போட்டி நட்சத்திரங்கள் என்றால் அது அஜீத்தும், விஜயும் தான்.

இதையும் படிங்க… அதே லீக்கான டைட்டில் தான்!.. தளபதி 68 டைட்டிலை விடுங்க பவர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தீங்களா?

இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வெளியாவதுண்டு. அந்த வகையில் உஙகள் விஜய் என்ற நிலையில் தொடங்கிய விஜயின் திரையுலகப்பயணம், இளையதளபதியாக வந்து இப்போது தளபதியாகி விட்டார் விஜய். ஆரம்பத்தில் கேப்டன் விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி என்ற படத்தில் இணைந்து நடித்து திரையுலகில் தனக்கான அறிமுகத்தைத் தேடிக் கொண்டார்.

அதற்கு முன்பு வரை அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கவே, விஜயின் தந்தை கேப்டனை அணுகி தன் மகன் நடிக்கும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே தனது குருநாதரான அவருக்கு கேப்டனும் நடித்துக் கொடுத்தார். அதுதான் செந்தூரப்பாண்டி.

இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதன் மூலம் படத்தின் நாயகனான விஜயும் பெரிதாகக் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வந்த படங்கள் சுமார் ரகமாகவும் அதன் பின் பிளாக்பஸ்டர் ஹிட்டும் அடித்தன. இந்தக் காலகட்டத்தில் வந்த பூவே உனக்காக படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பேசப்பட்டது. கில்லி, போக்கிரி, மாஸ்டர் ஆகிய படங்களில் அவர் ஆக்ஷன் ஹீரோவாக ஜொலிக்க, தளபதி அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

RP
RP

அதே போல எந்த சினிமா பின்னணியும் இல்லாத அஜித்குமார் படிப்படியாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆசை படம் கொஞ்சம் இவரை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது. அதன்பிறகு இவர் ஆக்ஷனில் களம் இறங்கியதும் இவருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் கிடைத்தது.

ரெட், முகவரி, சிட்டிசன் போன்ற படங்கள் இவருக்கு முன்னணி நட்சத்திர அந்தஸ்தைத் தேடித்தந்தன. அதற்கு முன்பு வரை வான்மதி, பவித்ரா என மென்மையான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலேயே வந்தார் நடிகர் அஜித். ரெட் படத்தில் நடித்ததில் இருந்து தல அஜீத் ஆனார்.

1995ல் வெளியான படம் ராஜாவின் பார்வையிலே. இந்தப்படத்தில் தளபதி விஜயும், அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப்படம் வந்த புதிதில் இருவருமே புதிய நடிகர்கள் தான். அதனால் யார் மீதும் ரசிகர்களின் பார்வை விழவில்லை. இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களுக்குப் பிறகு தான் இருவரும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களையே கொடுத்தனர். 1995ல் ஆசை, 1996ல் பூவே உனக்காக ஆகிய படங்கள் வெளியானது.

அப்போது இருந்த அரசியல் சூழலால் இந்தப் படம் பெரிதாகக் கவனிக்கப்படாமல் போனது. 1995ல் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஊடகங்களும் ஒரு காரணம். இது போன்ற பல காரணங்களால் இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.