தமிழில் நடிச்சது 8 படங்கள்.. முதல் படத்திலேயே கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் பத்மப்ரியா!

மற்ற மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து வெற்றி பெறும் நடிகைகள் பட்டியல் ஏராளம். ஊர்வசி, நயன்தாரா, அசின், அமலாபால், சிம்ரன், ஜோதிகா என இந்த லிஸ்டை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் முக்கியமான ஒருவர் தான் பத்மப்ரியா. இவர் ஏராளமான மலையாள படங்கள் நடித்துள்ள நிலையில், தமிழில் இவர் நடித்துள்ளது வெறும் 8 படங்கள் மட்டும் தான். ஆனால் அந்த படங்கள் இவரை கேரள திரையுலகம் தாண்டி தென் இந்தியாவில் இன்னும் பிரபலம் அடைய செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை பத்மப்ரியா டெல்லியை சேர்ந்தவர். சிறுவயதிலேயே கலையில் மிகவும் நாட்டம் உள்ளவர் என்பதால் நடனம், நாட்டியம் ஆகியவற்றை படித்தார். பத்மபிரியாவின் தந்தையார் இந்திய ராணுவத்தின் வேலை பார்த்தவர் என்பதால் அவ்வப்போது இடம் மாறி கொண்டே இருந்தார். இதனால் அவர் தனது டிகிரியை பல இடங்களில் படித்தார். ஒரு கட்டத்தில் அவர்கள் சென்னையில் செட்டில் ஆனார்கள். இந்த நிலையில் தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது

padmapriya 2

பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்தில் பிரியா என்ற பெயரில் நடித்த அவர் அதன் பிறகு இரண்டாவது படமான மலையாள படத்தில் இருந்து பத்மப்ரியா என்ற பெயரில் நடித்தார்

தமிழில் சேரன் நடிப்பில் உருவான ’தவமாய் தவமிருந்து’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். சேரனுக்கு ஜோடியாக நடித்த இந்த படம் தந்தை மகன் உறவை மிகவும் அருமையாக கூறியிருக்கும் ஒரு படம். இந்த படத்தில் பத்மப்ரியாவின் நடிப்பிற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருந்தது. அதுமட்டுமின்றி தமிழில் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதும் அவர் கைக்கு வந்து சேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் ’பட்டியல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆர்யா மற்றும் பரத் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதுடன், பத்மப்ரியா கேரக்டருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. அடுத்ததாக நடிகை பத்மபிரியா ’சத்தம் போடாதே’ என்ற திகில் படத்தில் நடித்தார். பிரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் பத்மப்ரியா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு பாடகி சின்மயி பின்னணி குரல் கொடுத்திருப்பார்.

padmapriya 1

இதன் பின்னர் பத்மப்ரியா நடித்த அடுத்த தமிழ் படம் ’மிருகம்’. ஆதி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் பத்மபிரியா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சாமி இயக்கத்தில் உருவான இந்த படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிக கவனமும் பெற்றிருந்தது. தவமாய் தவமிருந்து படத்தில் சேரனுடன் ஜோடி சேர்ந்திருந்த பத்மப்ரியா, அவருடன் பொக்கிஷம் என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தார்.

பெயரை போடவே இந்த படமும் பாதுகாத்து வைக்க வேண்டிய ஒரு படமான இதில், சேரன் மற்றும் பத்மபிரியா ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர் என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. அதே போல இந்த படத்தில் வரும் ‘நிலா, நீ வானம் காற்று’ பாடல் மிக முக்கியமான ஒரு தமிழ் பாடலாகும்.

இதனையடுத்து அவர், ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நடித்தார். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. கடைசியாக தமிழில் அவர் நடித்த திரைப்படம் தங்க மீன்கள். ராம் இயக்கத்தில் உருவான காவியமான இந்த படத்தில் பத்மப்ரியா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் ஏராளமான மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான ’வொண்டர் வுமன்’ என்ற இந்தியன் – ஆங்கில திரைப்படத்தில் வேணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பத்மப்ரியா பெற்றுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.