தமிழ் திரை உலகில் தனது 22 வது வயதில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இந்த படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்து தற்போது பிரபல நடிகராக இருக்கிறார். ஆனால் முதல் படத்தில் இவர் எப்படி இருந்தார் என்பது பற்றி இயக்குனர் மணி பாரதி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
வாடிவாசல் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார் போல சூர்யா!.. அடுத்த சிக்கல் உருவாகி விட்டதே!..
சூர்யா முதன்முதலில் நடித்த படம் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய், கௌசல்யா, சூர்யா, சிம்ரன், ரகுவரன், விவேக், மணிவண்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெற்றி படமாக தான் அமைந்தது.
இந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஒப்பந்தமான போது அவருக்கு ஆடிஷன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆடிஷனில் சூர்யா பயந்து நடுங்கியுள்ளார். நடிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்துள்ளார். இதனால் படத்தின் இயக்குனரான வசந்த் இவரை வைத்து எப்படி படம் எடுப்பது என யோசித்துள்ளார்.
சூர்யா இல்லாமல் மதுரையில் தொடங்கும் ஷூட்டிங்! சூர்யா 43 மாஸ் அப்டேட்!
அதன் பிறகு அனைவரும் பேசி முடிவெடுத்து சூர்யாவுக்காக படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளிப் போட்டனர். இந்த ஒரு மாதத்தில் இயக்குனர் மணி பாரதியும் மாரிமுத்து அவர்களும் சிவகுமார் வீட்டிற்கு சென்று பழைய திரைப்படங்களை டிவிடி மூலமாக சூர்யாவுக்கு போட்டு காட்டி ரஜினி எப்படி நடிக்கிறார், சிவாஜி எப்படி நடிக்கிறார், வசனங்களை பேசி காட்ட கூறி, நடந்து காட்ட கூறி இவ்வாறாக நடிப்பை கற்றுக் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு தான் சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருப்பார். அந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு சூர்யா நடித்த பல படங்கள் அவருக்கு வெற்றியை பெற்று கொடுத்தது.
ஆரம்பத்தில் நடிக்க பயந்து நடுங்கி இருந்தாலும் அதன் பிறகு அவர் எடுத்து நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்தது.