வாடிவாசல் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார் போல சூர்யா!.. அடுத்த சிக்கல் உருவாகி விட்டதே!..

இயக்குனர் வெற்றிமாறன் எந்த படத்தை இயக்கினாலும் அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து அது முடிய பல ஆண்டுகள் ஆகிவிடும் என ஒரு பேச்சு நிலவி வருகிறது. ஆனால், சூர்யாவுடன் அவர் இணைந்து பணியாற்ற உள்ள வாடிவாசல் படம் மட்டும் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பே வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப் போறார் என்றும் சூர்யா நடிக்கப் போறார் என்றும் அறிவித்தனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளார்.

வாடிவாசலுக்கு விடிவு காலம் எப்போ?

அந்த படத்திற்காக சென்னை ஈசிஆரில் ஒரு செட் எல்லாம் போட்டு மாடுகளை மட்டும் டெஸ்டிங் எடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. நடிகர் சூர்யா ஒரு காளை மாட்டுடன் பயிற்சி செய்வது போன்ற போட்டோக்களும் வெளியாகின.

ஆனால், அதற்கு பின் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், கங்குவா என பிசியாகி விட்டார். இந்தியில் அக்‌ஷய் குமார் நடித்து வரும் சூரரைப் போற்று படத்தை தயாரித்து வரும் சூர்யா அந்த படத்திலும் நடித்து வருகிறார். கங்குவா படத்தை முடித்து விட்டு மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ள சூர்யா அந்த படத்தை முடித்து விட்டாவது வாடிவாசல் படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கும் ஒரு சிக்கல் உருவாகி உள்ளது.

ஹாலிவுட்டுக்கு செல்லும் சூர்யா

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்ததை போல சூர்யாவுக்கும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், அந்த படத்தில் கமிட் ஆகி விட்டால், அது முடியும் வரை அவரால் மற்ற எந்த படத்திலும் நடிக்க முடியாத சூழல் உருவாகி விடும்.

இந்நிலையில், அதற்கு முன்னதாக வாடிவாசலை ஆரம்பிக்க முடியுமா என வெற்றிமாறனுக்கு சூர்யா மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதாகவும், விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் முடிக்கவே ரொம்ப நாள் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், வாடிவாசல் படத்தில் அமீர் நடித்தே தீருவார் என வெற்றிமாறன் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், அதற்காகவே சூர்யா அந்த படத்தை அவாய்டு பண்ணத்தான் தற்போது ஆங்கிலப் படத்தோடு வந்து வெற்றிமாறனுக்கு செக் வைத்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வாடிவாசல் படம் ஷூட்டிங் ஆரம்பித்தால் மட்டுமே அந்த படம் உருவாகும் என தெரிகிறது. இல்லையென்றால், சூர்யா இல்லாமல் தான் வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறன் அந்த படத்தை இயக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். அமீர் பிரச்சனை போல அடுத்து வெற்றிமாறனுடனும் பிரச்சனை வெடிக்காமல் இருந்தால் சரி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.