சூர்யா இல்லாமல் மதுரையில் தொடங்கும் ஷூட்டிங்! சூர்யா 43 மாஸ் அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சுரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் கமலின் விக்ரம் படங்கள் வித்தியாசமான ஜானகில் அமைந்தன. இந்த படங்களை தொடர்ந்து முன்னணி பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் இணைந்திருந்தார். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா உடன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த இந்த கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் சில மாதங்கள் முன் சூட்டில் நடந்த சில பிரச்சனையின் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது.

அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தில் சூட்டிங் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சூட்டின் ஸ்பாட்டில் நடந்த விபத்து ஒன்றில் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பிரம்மாண்ட சண்டை காட்சிகளை படம்பிடிக்கும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் தற்போது மும்பையில் ஓய்வில் உள்ளார். ஆனால் கங்குவா படத்தில் அவரது போஷன்கள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிஸ்டாரிக்கல் மூவியாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா 10 த்திற்கு மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் வெளியாக உள்ளதாகும் சமீபத்திய உறுதியான தகவல் கிடைத்துள்ளது. மேலும் கங்குவா திரைப்படம் பான் இந்தியா படமாக மட்டுமல்லாமல் உலகம் மொழிகளில் 38 க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரம்மாண்டமாக வெளியீடு செய்ய உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நிஷா பதானி, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் கோவை சரளா,ரெடீம் கிங்ஸ்லி போன்ற பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான கதைக்களன்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்ததாக சூர்யா 43 படத்திற்காக சுதா கொங்காரா இயக்கத்தில் அடுத்த மாதம் இணைய உள்ளார் சூர்யா. இந்த படத்தின் சூட்டின் அடுத்த மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படத்தின் முதற்கட்ட சூட்டில் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா இணையுள்ள நிலையில் இவர்கள் மூவரும் கல்லூரி மாணவியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்க்கு போட்டியாக புத்தாண்டு அன்று களமிறங்கும் விடாமுயற்சி! பர்ஸ்ட் லுக் அப்டேட்!

மேலும் படத்தில் கல்லூரி மாணவனாக சூர்யா நடிக்க உள்ள நிலையில் அதற்காக அவர் தற்போது கடுமையான பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அடுத்த மாதம் துவங்க உள்ள சூட்டிங் அவர் சிறிது தாமதமாகவே கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்க உள்ளதாக முன்னதாக பேட்டி ஒன்றில் சுதா கொங்காரா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்திற்கு தற்போது புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கங்குவா படத்தில் போர் வீரராக சூர்யா நடித்ததால் அவர் தனது உடலை அதிகமாக ஏற்றி மாஸ்காட்டி உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக புறநானூறு படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க கமிட்டாகி உள்ள நிலையில் இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் மும்பை சென்றுள்ள சூர்யா அங்கு உணவு கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.