கிரேசி மோகன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1997 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் அருணாச்சலம். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் ரம்பா, சௌந்தர்யா, விசு, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்தால் ரஜினி 3000 கோடிக்கு அதிபதியாகலாம் என்ற நிபந்தனையை அவரது அப்பா வேதாச்சலம் விதித்திருப்பார். அப்படி செலவு செய்ய முடியவில்லை என்றால் 3000 கோடி பணமும் வேதாச்சலம் அவர்களின் டிரஸ்ட்க்கு சென்று விடும்.
பிறந்தநாளுக்கு ரசிகர்களை சந்திக்காத ரஜினி.. இதுதான் காரணம்.. உறுதியாக எடுத்த முடிவு..!!
ஆனால் ட்ரஸ்ட்டை நிர்வாகிப்பது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நான்கு பேர். அவர்கள் கைக்கு பணம் போகக்கூடாது என்று நினைக்கும் ரஜினி 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்ய முன்வருவார். அப்படி அவர் சவாலில் வெற்றி பெற்றாரா? கடைசியில் என்ன ஆனது என்பது தான் கதை.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் பாடல்களை தேவா இசை அமைத்திருந்தார். அதேபோன்று படத்திற்கு வசனம் எழுதியது கிரேசி மோகன். கிரேசி மோகன் தமிழ் படங்களின் மூலமாகத்தான் அறிமுகமானார்.
இந்நிலையில் அருணாச்சலம் திரைப்படத்திற்காக கிரேசி மோகன் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அருணாச்சலம் படத்திற்கு நீங்கள் தான் வசனம் எழுத வேண்டும் என்று ரஜினி கூற முதலில் கிரேசி மோகன் நம்பவில்லை. யாரோ வேடிக்கையாக போன் செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்துள்ளார்.
எடுத்து முடித்த படம்.. மீண்டும் நடித்த சிவாஜி.. ஏன் தெரியுமா..?
அதன் பிறகு மீண்டும் ரஜினி நான் ரஜினி தான் பேசுகிறேன் அருணாச்சலம் படத்திற்கு வசனம் எழுத வேண்டும் என கேட்டுள்ளார். உடனே கிரேசி மோகன் நான் தொடர்ந்து கமல் படங்களுக்கு பணியாற்றி வருகிறேன். என்னை அறிமுகப்படுத்தியதும் கமல்ஹாசன் அவர்கள் தான்.
அதனால் நான் கமல்ஹாசனிடம் அனுமதி பெற்று விட்டு வருகிறேன் என கூறியுள்ளார். உடனே ரஜினிகாந்த் நல்லது தாராளமாக அனுமதி வாங்கிவிட்டு வாருங்கள் என கூறிவிட்டார். இதனால் அடுத்த நாள் கிரேசி மோகன் கமலை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே ரஜினிகாந்த் கமல்ஹாசனிடம் பேசிவிட்டார்.
ஒரு படத்திற்காக கெஞ்சிய அஜித்.. இப்போ ரசிகர்களின் அல்டிமேட் ஸ்டார்.. திறமையால் உயர்ந்த AK..!!
போனவுடன் கமல் கிரேசி மோகனிடம் என்ன ரஜினி படத்தில் வசனம் பண்ண போறீங்களா. அமோகமா பண்ணுங்க எனக் கூறியுள்ளார். உடனே கிரேசி மோகன் அது தான் உங்களிடம் அனுமதி பெற்று விட்டு செல்லலாம் என்று வந்தேன் என்று கூற, தாராளமாக பண்ணுங்கள் நல்ல பெயர் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை கிரேசி மோகன் சகோதரர் மது பாலாஜி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.