கன்னி சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

கன்னி ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 6 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். 6 ஆம் இடமான கும்பம் சனி பகவானின் வீடாகும். உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும்,…

kanni

கன்னி ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 6 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். 6 ஆம் இடமான கும்பம் சனி பகவானின் வீடாகும்.

உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும், சிறிய அளவிலான பிரச்சினைகளை நீங்கள் உடனடியாகப் பார்க்காமல் பெரிய தொந்தரவாக மாறிய பின் பார்ப்பீர்கள்.

திருப்பதி பெருமாளை குடும்பத்துடன் தரிசனம் செய்யுங்கள். முடிந்தளவு உடனே கிளம்பாமல் இரவு நேரம் திருப்பதி மலையிலேயே தங்கி இருந்துவிட்டுக் கிளம்பவும்.

குடும்ப விஷயங்களில் சிறிது கவனம் தேவை. பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருங்கள். உங்கள் மனதில் புதுத் தெம்பும், தெளிவும் பிறக்கும். துணிச்சலுடன் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.

நிறைய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப் பெறும். வேலைரீதியாக மிகச் சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வேலை, தொழில், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றங்கள் அதிக அளவில் இருக்கும்.

நிறைய பணத்தினை முதலீடு செய்து நஷ்டம் அடைந்து இருப்பீர்கள்; முன் பின் தெரியாதவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து போய் இருப்பீர்கள். தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவீர்கள்.

பண சேமிப்பு ஏற்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் உங்களுக்குப் பாடமாக அமையும். சிறிய அளவில் லாபம் வந்தாலும் அபாயம் இல்லாத முதலீடுகளையே எப்போதும் தேர்வு செய்யுங்கள்.

சுப காரியத் தடைகள் நிவர்த்தியாகும், இந்த சனி பெயர்ச்சியில் உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கப் பெறும். உங்களைப் பெரிதாக மதிக்காமல் இருந்தவர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கானது அதிகரிக்கும்.

கேதுவும் – ராகுவும் சம சப்தமத்தில் இருப்பதால் குடும்ப விஷயத்தில் கவனம் தேவை.  குடும்ப விஷயத்தில் ஆக்ரோஷம் காட்டாதீர்கள். பிரச்சினைகள் உங்களைத் தேடி வந்தாலும் வெள்ளைக் கொடி காட்டுவிடுவது நல்லது.

கடன் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!