Saranya: ஜீவா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ராம். அமீர் இயக்கிய இந்த படத்தில் கஸாலா, சரண்யா, ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதைப்படி ஜீவா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார்.
படத்தில் ஜீவாவின் தாயாக நடித்த சரண்யாவை வேறு ஒருவர் கொலை செய்து விட அந்த பழி ஜீவாவின் மீது விழும். அதன் பிறகு உண்மையான குற்றவாளி எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் ஜீவா என்ன ஆனார் என்பதுதான் மீதி கதை. இந்த படத்தின் கதை தயாரிப்பு இயக்கம் என மூன்றுமே அமிர்தான்.
இந்த படத்தில் சரண்யா மற்றும் ஜீவா இடையேயான காட்சி அதிகம் இடம் பெற்று இருக்கும். கொடைக்கானலில் தான் இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரண்யா ராம் படப்பிடிப்பு குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
படம் சரியா போகல.. சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சுந்தர்.சி.. இரண்டு நாள் கழிச்சு நடந்த அற்புதம்..
அப்போது அவர் கூறிய போது அந்த சமயத்தில் ராம் மட்டும்தான் தான் நடித்துக் கொண்டிருந்த படம் என்று கூறியுள்ளார். ஜீவாவுக்கும் அப்போது எந்த படமும் நடிக்க வேண்டியது இல்லை என்பதால் அவர்கள் இருவரையும் அமீர் கொடைக்கானலில் ஒரு வீட்டில் ஹவுஸ் அரஸ்ட் மாதிரி அடைத்து வைத்திருந்ததாக வேடிக்கையாக கூறியுள்ளார்.
அப்போது ஆராரிராரோ என்ற ஒரு பாடலை பத்து நாட்களாக அமீர் எடுத்ததாகவும் கூறியுள்ளார். அதாவது சின்ன சின்ன காட்சிகளாக தான் அமீர் படமாக்குவாராம். இதனால் சிறிய காட்சிகள் நடித்து முடித்துவிட்டு சரண்யாவும் ஜீவாவும் கொடைக்கானலை சுற்றி பார்க்க புறப்பட்டு விடுவார்களாம்.
நண்பன் படம்.. இவ்வளவு நீள டயலாக்.. விஜய் ஒரே டேக்கில் முடிச்சாராம்..!!
அதோடு சரண்யா அதிகமாக கதை பேசியது ஜீவாவிடம் தான் என்றும் கூறியுள்ளார். அப்படி சுதந்திரமாக கொடைக்கானலில் இருவரும் அங்கங்கு அமர்ந்து சாப்பிடுவது சுற்றி பார்ப்பது என திரிந்துள்ளனர். படப்பிடிப்பு சமயத்தில் மட்டும் வந்து நடித்துவிட்டு அதன் பிறகு மீண்டும் சுற்று துவங்கி விடுவார்களாம்.