Shivaji Ganesan: சினிமாவை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக்கொண்டு மதித்துப் போற்றியவர்தான் சிவாஜி கணேசன். திரையில் அவர் நடித்த கதாபாத்திரங்களை இனி யாரும் நடிக்க முடியாது, நடிக்க முயற்சித்தாலும் அவரது உடல் மொழி முகபாவனை கொண்டு வருவது கஷ்டம்.
திரைத்துறையில் வரலாறு படைத்த மகா கலைஞரான சிவாஜி கணேசன் ஒரு காட்சி நடிக்க ஏழு முறை ஒன் மோர் வாங்கியுள்ளார் என்பது நம்ப முடியாது தான். ஆனால் அதுவும் நடந்துள்ளது. பேசும் தெய்வம் படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் நடித்தார். ஆனால் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் ஒன் மோர் சொல்லியுள்ளார்.
நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் மாஸ் காட்டிய நடிகர் திலகம்! சிவாஜியின் மறுபக்க ரகசிய அப்டேட்!
மீண்டும் சிவாஜி நடித்தார். ஆனால் மீண்டும் மீண்டும் என ஆறு முறை ஒன் மோர் ஒன் மோர் என்று நடித்தார். ஏழாவது முறை ஒன் மோர் என்று சொன்னவுடன் சிவாஜி இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் சென்று எனக்கு தெரிந்த மாதிரி எல்லாம் நடித்து விட்டேன்.
இனி எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டுமாறு கேட்டுள்ளார். இயக்குனரும் சிவாஜி கணேசன் கூறியது போன்று நடித்துக் காட்ட அங்கிருந்து சிவாஜி உடனடியாக காரில் புறப்பட்டு சென்று விட்டார். இதனால் பட குழுவுக்கு அவர் கோபத்தில் சென்று விட்டார் என்று ஒரு பயம் ஏற்பட்டது.
பத்து ரூபாயை சம்பளமாகப் பெற்ற சிவாஜி பட இயக்குனர்… நாடக ஆர்வம் வரக் காரணமே இதுதானாம்..!!
ஆனால் இரவு 12 மணி அளவில் தொலைபேசியில் அழைத்து மறுநாள் காலையில் 7:00 மணிக்கு படப்பிடிப்புக்கு வருவதாக கூறியுள்ளார். அதேபோன்று ஏழு மணிக்கு அந்த காட்சிக்கான உடையிலேயே வந்த சிவாஜி ஒரே டேக்கில் சரியாக நடித்து முடித்தார்.
இதில் மகிழ்ச்சி அடைந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் கண்ணீரோடு சிவாஜியை கட்டி தழுவி இதை தானே நேற்றே கேட்டேன் என்று கூறியுள்ளார். அப்போது சிவாஜி நான் கோபப்பட்டு இங்கிருந்து புறப்படவில்லை. இத்தனை வருடமாக நடித்தும் நீங்கள் நடித்தது போன்று என்னால் ஏன் நடிக்க முடியவில்லை என்று வீட்டிற்கு சென்று கண்ணாடி முன் நின்று பலமுறை பயிற்சி எடுத்தேன்.
எனது மனைவி கமலா கூட புதிதாக நடிப்பது போன்று கண்ணாடி முன் நடித்து பார்க்கிறீர்களே என்று கேட்டார். சுமார் 20 முறை நடித்து பார்த்துவிட்டு என்னால் நீங்கள் நினைக்கும் படி நடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் படப்பிடிப்புக்கு வருவதாக தகவல் கொடுத்தேன் எனக் கூறினார். இப்படி ஒரு காட்சி இயக்குனருக்கு பிடித்த மாதிரி வேண்டும் என்பதற்காக பல மணி நேரம் கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுத்துள்ளார் சிவாஜி கணேசன்.