நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் மாஸ் காட்டிய நடிகர் திலகம்! சிவாஜியின் மறுபக்க ரகசிய அப்டேட்!

நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிவாஜி நடிப்பில் வெளியாகாமல் பல படங்களும் இன்றளவும் தமிழ் சினிமாவில் உள்ளது. இப்படி இருக்க சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்த சிவாஜி பல இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஏற்ற மாதிரி தன் கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். இப்படி நடிப்பில் மட்டும் களமிறங்கி கலக்கி வந்த நடிகர் திலகம் இயக்குனராக களம் இறங்கி கலக்கி உள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. அப்படி நடிகர் திலகம் சிவாஜி இயக்கத்தில் வெளியான அந்த ஒரு நாடகம் குறித்த தகவலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய சினிமாவில் நடிப்பிற்கு இலக்கண வகுத்த நடிகர் திலகம் பல படங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த செல்வாக்கினாலும் புகழினாலும் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் நமக்குத் தெரியாத சிவாஜியின் மற்றொரு முகம் ஒன்று உள்ளது. அதாவது 1965 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று நடந்து வந்துள்ளது. அந்த நேரத்தில் நம்மளுடைய இந்திய வீரர்களுக்கு உதவும் பட்சத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை திரட்டி அரசாங்கத்திற்கு தரும்படி நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதை அன்புடன் ஏற்றுக் கொண்ட சிவாஜி வெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தினால் சிறப்பாக இருக்காது என்பதை புரிந்து கொண்டு பிரம்மாண்டமாக ஒரு நாடகம் ஒன்றை நடத்தும்படி திட்டமிட்டுள்ளார். அதற்காகவே சந்திராலயா கோபு என்பவரை அழைத்து சிறந்த நாடகம் ஒன்றை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார் அதன்படி அவரும் ஒரு நாடகத்தை தயார் செய்து நடிகர் திலகம் சிவாஜி இடம் கொடுத்துள்ளார். அந்த நாடகத்தின் பெயர் கலாட்டா கல்யாணம்.

இந்த நாடகத்தின் மையக்கதை சோம்பேறியாக இருக்கும் ஒரு தந்தைக்கு நாலு பெண் குழந்தைகள். அந்த நாலு பெண் குழந்தைகளுக்கும் மாப்பிள்ளை பார்த்து சரியான வயதில் கல்யாணம் செய்து வைப்பதற்கு கூட அந்த தந்தைக்கு சோம்பேறித்தனம். அந்த நேரத்தில் அவரின் இரண்டாவது மகள் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். அப்பொழுது அந்த தந்தை இரண்டாவது நபரை அழைத்து தன் மூன்று மகள்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வைத்தால் என் இரண்டாவது மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். இப்படி கலாட்டாக்கள் நிறைந்த காமெடியுடன் அந்த கதை அமைந்திருக்கும் இதை பார்த்த சிவாஜிக்கு கதை மிகவும் பிடித்து போய்விட்டது.

ரஜினியின் வேட்டையன் படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் குறித்த மாஸ் அப்டேட்?

பொதுவாக இப்படிப்பட்ட சிறந்த கதை சிவாஜி இடம் கிடைக்கும் பொழுது சிறந்த நடிகனாக இருந்து மக்களை மகிழ்வித்த சிவாஜி இந்த முறை மாறுதலாக சிறந்த இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த நாடகத்தில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் எந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நடிகர்களை தேர்வு செய்து அதற்கு ஏற்ற போல் அந்த நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் திலகம் சிறப்பாக ஈடுபட்டார்.

படங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்தில் ஏழை மக்களுக்கு உதவி வந்த சிவாஜி இந்த முறை சற்று மாறுதலாக நாடகம் ஒன்றை நடத்தி இந்திய ராணுவ வீரர்களுக்காக உதவியது மக்களிடையே நல்ல மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நாடகத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய தொகையை நடிகர் திலகம் சிவாஜி தமிழ்நாடு அரசிற்கு கொடுத்து உதவியது காலத்தில் அழியாத சான்றாக அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.