தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக இருந்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல வித குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இவரின் படங்கள் அனைத்துமே அந்த கால மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்திலேயே நடித்த சத்யராஜ் பின்னர் சினிமாவில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன.
வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!
இவர் நடித்த கடலோர கவிதைகள், பூவிழி வாசலிலே போன்ற திரைப்படங்கள் இவருக்கென தனி அடையாளத்தையே உருவாக்கின. இவர் அன்று மட்டுமல்லாமல் இந்த கால நடிகர்களுடனும் ஈடு கொடுத்து நடித்து வருகிறார். ராஜா ராணி, வருத்தபடாத வாலிபர் சங்கம், கடைகுட்ட் சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் தனது கதாபாத்திரத்தினை மிக கட்சிதமாக கொடுத்திருந்தார்.
1985ஆம் ஆண்டில் மிகவும் அதிக அளவு திரைப்படங்களில் நடித்தார் சத்யராஜ். அப்போது முதல் மரியாதை திரைப்படத்தினை இயக்கிய பாரதிராஜா அப்படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜை அழைத்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் இவர் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.
கேப்டனை சிபாரிசு செய்த வாகை சந்திரசேகர்… இவராலதான் கேப்டன் அப்படி ஆனாரா?
அதனால் அப்படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். ஆனால் பாரதிராஜா அவரிடம் தனக்காக வந்து நடிக்கும்படி கேட்டுள்ளார். பின்னர் மற்ற படபிடிப்புகள் இல்லாத ஒரு நாளை இவருக்காக சத்யராஜ் கொடுத்துள்ளார்.
அப்படி சத்யராஜ் ஒரே நாள் கால்ஷீட்டில் நடித்து கொடுத்த திரைப்படம்தான் முதல் மரியாதை. ஆனால் அப்படத்தை பார்க்கும்போது சத்யராஜ் அவரது காட்சிகளை ஒரே நாளில்தான் நடித்தார் என்பது தெரியாத அளவு கட்சிதமாக நடித்திருப்பார். இதற்கு சத்யராஜின் நடிப்பும் அதே சமயம் பாரதிராஜாவின் இயக்கமும்தான் காரணமாகும்.