காதல் கோட்டை ஹீரா வாழ்க்கை அனுபவங்கள்.. இப்போது என்ன செய்கிறார்..?

By Bala Siva

Published:

முரளி நடித்த இதயம் படத்தில் அறிமுகமாகி, திருடா திருடா, காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் ஹீரா.

நடிகை ஹீரா  சென்னை சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதில் அவரது அப்பா பணியின் காரணமாக பல ஊர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டதால் பல ஊர்களில் தனது படிப்பை முடித்தார். அவரது அப்பா டாக்டராகவும் மற்றும் அம்மா நர்ஸாகவும் இருந்தனர்.

85 ரூபாயுடன் சென்னை வருகை.. இளையராஜா வீட்டில் எடுபிடி.. பிரபல இசையமைப்பாளரின் வெற்றிக்கதை..!

heera2

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மாடலிங் தொழிலில் ஈடுபாடு ஏற்பட்டது.  கடந்த 90களில் அவர் பிரபல பத்திரிகைகளில் அட்டைப்படத்திற்கு மாடலிங் செய்துள்ளார். இதன் பிறகு அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதன்முதலாக அவர் இதயம் என்ற திரைப்படத்தில் முரளி ஜோடியாக நடித்தார். கதிர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார்.

ஒரு கல்லூரி மாணவி எப்படி இருக்க வேண்டும்? தன்னிடம் காதல் என்று கூறும் மாணவர்களிடம் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்? ஒரு காதலை ஏற்றுக் கொள்வதற்கு முன் என்னென்னவெல்லாம் யோசிக்க வேண்டும் என்பதை இந்த கேரக்டர் மூலம் கதிர் அழகாக காதலர்களுக்கு ஒரு பாடமாகவே சொல்லி இருப்பார்.

heera1

இந்த படத்தில் அவர் கீதா என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அவரது பெயர் பல இளைஞர்களின் மனதில் குடியிருந்தது. இதன் பிறகு அவர்  வசந்த் இயக்கத்தில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான ‘நீ பாதி நான் பாதி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து அவர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா என்ற படத்தில் நடித்ததுதான் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் அவருக்கு சுகாசினி பின்னணி குரல் கொடுத்திருப்பார். அவரது நடிப்பும் அபாரமாக இருந்தது.

தமிழில் ஒருசில படங்கள் தான்.. அதன்பின் தமிழக அமைச்சரின் மருமகள் ஆன நடிகை..!

இந்த படத்தை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் ஒரு சில படங்களில் ஹீரா நடித்தார். மீண்டும் தமிழில் அவருக்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றால் காதல் கோட்டை படம்தான். அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் அஜித்தை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் ஹீரா நடித்திருப்பார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

heera

இதனை அடுத்து அவர் பூவேலி, தொடரும் உள்ளிட்ட ஒரு சில படங்கள் நடித்த நிலையில் 1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

நடிகை ஹீராவுக்கு 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், 2006ஆம் ஆண்டு அவர் கணவரை பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் பாடகிகளாக மாறிய நடிகைகள் யார் யார் தெரியுமா?

தற்போது அவர் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருவதாகவும் புத்தகங்கள் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கும் அவர் புத்தகங்கள் எழுதி வருவதாகவும் அவரது புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.