ஜெயலலிதா கொடுத்த ஐடியாவால உருவான ஹிட் பாடல்… அட அந்த பாடலா!…

By Amutha Raja

Published:

ஜெயலலிதா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த நடிகை. இவர் ஆரம்பத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலேயே நடித்து வந்தார். பின் தமிழில் வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் மேலும் ஆயிரத்தில் ஒருவன், கன்னிதாய், நவராத்திரி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இவர் ஒருகட்டத்திற்குமேல் எம்ஜிஆருடன் மட்டுமே சினிமாவில் நடித்து வந்தார். பின் அரசியல் மீது ஆர்வம் கொண்ட இவர் எம்ஜிஆரின் உதவியால் அரசியலுக்குள் நுழைந்தார்.

சொல்லாமல் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் செஞ்ச தரமான சம்பவம் : பொன்மனச் செம்மல் பட்டம்னா சும்மாவா?

தனி ஒரு பெண்ணாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பல முறை பொறுப்பேற்றுள்ளார். இன்றும் இவர் பலருக்கு முன்னோடியாக திகழ்கிறார். கணவன், ரகசிய போலிஸ் 115 போன்ற திரைப்படங்களில் இவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்திருந்தார். அந்த காலத்தில் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

இவர் நடிகர் சிவாஜி கணேசனுடன் நடித்த திரைப்படம்தான் பட்டிகாடா பட்டணமா திரைப்படம். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தினை இயக்குனர் பி.மாதவன் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் மனோரமா, வி.கே.ராமசாமி, காந்திமதி போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்திருந்தனர்.

ரஜினியுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த ஹீரோயின் இவரா? 4 சூப்பர் ஸ்டார்களின் நாயகி ஸ்ரீ பிரியா

இப்படத்தில் உள்ள பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தன. இப்பட பாடல்கள் உருவாகும் போது இப்படத்தின் இயக்குனர் நாடகங்களில் வருவது போன்று பாடல்கள் வரவேண்டும் என நினைத்தாராம். அப்படி உருவான பாடல்தான் என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு பாடலாம். இது பழைய நாடகங்களில் வந்த என்னடி ராக்கம்ம கண்ணுல மை பாடலை தழுவி உருவாக்கப்பட்டதாம்.

மேலும் இப்படத்தில் உள்ள மற்றொரு பாடல்தான் கேட்டுகோடி உறுமி மேளம் பாடல். இப்பாடலின் முதல் வரியை ஜெயலலிதாதான் உருவாக்கினாராம். அவர் உருவாக்கிய பின் அந்த வரிகளுக்கு கோர்வையாக போட்டுகோடி கோபம் தாளாம் வரியை உருவாக்கினாராம். பின் கண்ணதாசன் இந்த வரிகள் இருக்கட்டும் என அந்த பாடலை தொடர்ந்து உருவாக்கினாராம். இப்படி இவர்கள் மூவரும் இணைந்து உருவாகியதுதான் இப்பாடல். இப்பாடம் இன்று கூட பலராலும் விரும்பப்படுகிறது.

அந்தப் படத்துல பயந்து பயந்து நடிச்ச விஜய்!.. ஆனா டுவிஸ்ட் அங்க தான் இருக்கு!..