சொல்லாமல் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் செஞ்ச தரமான சம்பவம்.. பொன்மனச் செம்மல் பட்டம்னா சும்மாவா?

திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் விலகி தனது தொண்டர்கள் பலத்தை மட்டுமே நம்பி அஇஅதிமுக என்ற தனிகட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் வாழ்வில் ருசிகர சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை போல அவருக்கு வந்த கடிதங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கிறார்.அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பெயரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என எதுவுமே இல்லாமல் வந்த திருமண பத்திரிகை அது. ஆனால் அக்கடிதத்தில் உதவி கேட்டோ, விழாவில் கலந்து கொள்ள அழைப்போ இல்லை.

இதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு மனதில் ஏதோ தோன்ற தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது.

அவர் செருப்பு தைக்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்டப் பட்டு இருந்தது. விவரங்களை கேட்ட எம்.ஜி.ஆர் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும், ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து பூரித்துப் போகிறார்.

மாற்றிப் போட்ட ஒரே ஒரு வார்த்தையால் ஓஹோவென ஹிட் ஆன பாடல்… இப்படி ஒரு சீக்ரெட்டா?

திருமண நாளின் போது முகூர்த்த நேரத்திற்கு முன்னதாக திடீரென காவல் துறை அந்த ஏழை தொழிலாளி திருமணம் நடக்கும் இடம் முன்னால் அணிவகுப்பு  நடத்த காரணம் தெரியாமல் விழி பிதுங்கினர் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் புரட்சித் தலைவர்.

கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் வள்ளல் எம்ஜிஆர். இவ்வாறு நடிப்பிலும் மட்டும் மக்கள் திலகம் எளிமைக் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை.

உண்மையாகவே இவ்வாறு அள்ளிக் கொடுத்து பல்வேறு இதயங்களைக் கொள்ளை கொண்டு வாரி வழங்கிய வள்ளல் அவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.