கமல் – மணிரத்தினம் கூட்டணியில் இணையும் நயன்தாரா… நயனின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

தென்னிந்திய திரை உலகின் கனவு கன்னியாகவும், லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவும் நடிகை நயன்தாரா வலம் வருகிறார். கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா சரத்குமாரின் ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த நிலையில் இரண்டாவது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடியாக நடித்தார். அதைத் தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, விஷால், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் ஹிந்தியில் நயன்தாரா நடித்த முதல் திரைப்படம் ஆகும். அதைத்தொடர்ந்து தமிழில் நயன்தாராவின் இறைவன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த திரைப்படம் நயன்தாராவிற்கு எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காமல் தோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் 75 வது திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி இருந்தது. நிலேஷ் இயக்கத்தில், தமன் இசையில், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அன்னபூரணி என தலைப்பிடப்பட்டுள்ளது. அறம், நெற்றிக்கண்,மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களைப் போலவே இந்த திரைப்படமும் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷிவனுடன் 9 ஆண்டுகளாக காதலில் இருந்த நயன்தாரா கடந்த வருடம் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்பொழுது இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளது. சினிமாவிற்கு இணையாக குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா தற்பொழுது சொந்தமாக சில பிசினஸ்கள் செய்து வருகிறார். 9 skin பியூட்டி பிராண்டுகளில முதலீடு செய்து அதற்கான ப்ரோமோஷன்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தடுத்து குடும்ப வாழ்க்கை, சொந்தத்தொழில் என பிசியாக இருக்கும் நயன்தாரா சினிமாவிலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில் நயன்தாரா அடுத்ததாக மணிரத்தினம் இயக்கம் கமலஹாசனின் 234 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வீடியோ கமலஹாசனின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக இருந்து கொண்டு அஜித்தை புகழ்ந்து தள்ளும் ராகவா லாரன்ஸ்!

கமலை தொடர்ந்து இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என இரு முன்னணி கதாநாயகர்கள் நடிக்க உள்ளனர். மேலும் ஹீரோயினாக நடிகை திரிஷா மற்றும் நடிகை அபிராமி நடிக்க உள்ளனர். இந்த நிலையில் சினிமா துறையில் நடிகை திரிஷாவின் போட்டி நடிகையான நயன்தாரா இந்த படத்தில் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 20 ஆண்டிற்கு மேலாக முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா இந்த படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு 12 கோடி சம்பளமாக தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் 10 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் 12 கோடி சம்பளம் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பளத்தை நயன்தாரா வாங்கும் பொருட்டு தென்னிந்திய திரை உலகின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக நயன்தாரா உயர்ந்துள்ளார்.