வீரா படத்தோடு இளையராஜா உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ரஜினி!..ஏன் தெரியுமா..?

By Sathish

Published:

எண்பதுகளில் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக வளர்ந்தவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு அவருடைய தனி திறமை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அதற்கு அவரே பல பேட்டிகளில் என்னை இவ்வளவு பெரிய ஆளாக்கியதற்கு முக்கிய காரணம் என்னுடன் பணியாற்றிய எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள்தான். இவர்களால் தான் என்னால் இவ்வளவு உயரத்திற்கு அடைய முடிந்தது என்று பல பேட்டியில் கூறியுள்ளார் ரஜினி.

தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்றடைய முக்கிய காரணங்கள் ஒன்று அவர் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்ததே. குறிப்பாக தன்னுடைய படங்களில் வரும் பாடல்கள் மூலம் கிராமப்புற மக்களிடையே எளிதாக சென்றடைந்தார். அக்காலகட்டத்தில் இவர் ஒரு மெட்டு போட்டாலே அந்த பாட்டு ஹிட் தான் என்று சொல்லும் அளவிற்கு இசை உலகின் ஜாம்பவானாக விளங்கியவர் இளையராஜா. ரஜினியின்‌ பல படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடலை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

இவர்களது கூட்டணியில் வெளிவந்த பல படங்கள் வெற்றி படங்களாக வரிசை கட்டின. அப்படி இருக்கையில் வீரா திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இன்று வரை இளையராஜா உடன் இணையாமல் இருப்பதற்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் என்று தகவல்கள் வெளிவந்தன. அதில் ரஜினி ஒரு பேட்டியில் பேசும்பொழுது, “நாங்கள் வெயில் மழை என்று பாராமல் கஷ்டப்பட்டு நடித்து பெயரும் புகழும் வாங்க வேண்டி உள்ளது. ஆனால் இளையராஜாவோ ஏசி ருமில் ஜாலியாக இருந்து கொண்டு இசையமைத்து பெரும் புகழும் வாங்கி விடுகிறார்” என்று சொல்லிவிட்டார்.

அதற்கு பதிலடி கூறும் விதமாக இளையராஜாவோ, “நாங்கள் வேண்டுமென்றால் நடிக்க வருகிறோம், ரஜினி இசையமைத்து பார்க்கட்டும்” என்று சொல்லிவிட்டார். இதைக் கேட்ட பிரமுகர் ஒருவர் ரஜினி இசையமைத்து இளையராஜா நடிக்க ஆரம்பித்தால் இதை யார் பார்ப்பார்கள்..? கேட்பார்கள்..? அவர்கள் தங்களுக்கு தெரிந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது என்று பேசிவிட்டார். இதனால் ரஜினி மன்றம் இளையராஜா இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிய நேர்ந்தது. அதன் பிறகு ரஜினி ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யாசாகர், சந்தோஷ் நாராயணன், அனிருத் என இளம் இசையமைப்பார்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் ரஜினி இளையராஜா இசையில் நடிக்க நினைத்தாலும் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் ரஜினியும் இளையராஜாவும் இன்று வரை இணைய முடிவதில்லை. என்னதான் இருவரும் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் சினிமா விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் இளையராஜா ரஜினி பாராட்டுவதும் ரஜினி இளையராஜாவை பாராட்டுவதும் என்று தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.