பிரதீப் ஆண்டனி பஞ்சாயத்தை திசை திருப்ப.. பிக் பாஸ் போட்டியாளர்களிடம் சண்டையை மூட்டி விடும் பிக் பாஸ்!

பிக் பாஸ் 7 தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில் விஜய் வர்மா, அனன்யா, யுகேந்திரன், வினுஷா, அன்னபாரதி உள்ளிட சிலர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். பவா செல்லதுரை தானே வெளியேறிவிட்டார். இந்த சீசனில் டஃப் போட்டியாளராக பிரதீப் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியெற்றப்பட்டார்.

மேலும், கமல்ஹாசன் தீர விசாரிக்காமல் ரெட் கார்டு கொடுத்ததற்கும், வார்னிங் கொடுத்து பின்னர் ரெட் கார்டு கொடுத்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

பிரதீப் ஆண்டனி வெளியேற்றம்

இந்நிலையில் பிரதீப் தன்னுடைய அடுத்த வேலையை பார்க்கப்போவதாகவும்; கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தீர விசாரிப்பதே மெய் என்றும் டிவீட் செய்திருந்தார்.
இதற்கிடையே மாயா இந்த வார கேப்டனாக உள்ளார். அர்ச்சனா, விசித்திராவின் டூத் பிரஷ்ஷை எடுத்து வைத்துகொண்டு கொடுப்பதற்கு அவர் செய்த விஷயங்கள் எல்லாரையும் கோவப்படுத்தியுள்ளது.

எவிக்ட் செய்யப்பட்ட யுகேந்திரனும் பிக்பாஸில் மாயா, பூர்ணிமா போன்ற சிலருக்கு தான் கமல்ஹாசன் முக்கியத்துவம் அளிக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்துக்காக பிரதீப்பை வெளியேற்றும் முன்னர் கமல்ஹாசன் தன் முகத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்த்து நிதானமாக யோசித்திருக்க வேண்டும். பிரதீப் விஷயத்திலும் அரசியல் செய்துவிட்டார். கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையை அரசியல் மேடையாக பயன்படுத்திக்கொள்கிறார் என்றும் கூறினார்.

பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை

சரவணன் மினாட்சி ரச்சிதாவின் கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்த நிலையில், அவர் ஒரு ஆம்பளையா என சந்தேகமாக இருப்பதாக ஜோவிகா பேசியதை போர்டில் வெளியிட்டு அனைத்து ஹவுஸ் மேட்டுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஜோவிகாவை வசமாக மாட்டிவிட்டுள்ளார் பிக்பாஸ்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பெண்கள் பலர் பிரதிப் அண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கும்போது தினேஷ் ஏதும் கேட்காததால்தான் அப்படி கூறினேன் என ஜோவிகா எந்தவித பதட்டமும் இன்றி பேசியுள்ளதும் தினேஷ் கோவப்படும் காட்சிகளும் ப்ரோமோக்களில் வெளியாகி இருந்தன.

அது மட்டுமில்லாமல் ஆர்ஜே பிராவோ தன்னை கீழ இருந்து மேல பார்க்கிறான் என பிக் பாஸிடம் மாயா கூறியதையும் போர்டில் அறிவித்து மாயாவுக்கும் பிராவோவுக்கும் பிரச்சனயைக் கிளப்பிவிட்டுள்ளார் பிக் பாஸ். ஏங்க உங்கள அவன் ஸ்கேன் பண்ற மாதிரி கீழ இருந்து மேல பார்த்தானா என கேட்டதும், கேரக்டர் அசாஸினேஷன் பண்ணாதீங்க என மாயா சொன்னதும் நீங்க தாங்க அவனை காலி பண்ணியிருக்கீங்க என தினேஷ்ஷும் விஜே பிராவோவும் மாயாவிடம் சண்டை போட ஆரம்பித்தனர்.

இந்த சீசனில் மாயா ஆரம்பத்தில் இருந்தே கூல் சுரேஷ் தப்பா பார்த்தாரு, பிரதீப் தப்பா பார்த்தாரு, இப்போ பிராவோ தப்பா பார்க்குறாருன்னு சொல்லியே ஒவ்வொருத்தராக காலி செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக பிக் பாஸ் ரசிகர்களும் பிக் பாஸ் பிரபலங்களும் கருத்து தெரிவித்து அவரை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.