நடிகர் சிவக்குமாரின் வாரிசுகளாள சூர்யா-கார்த்தி என இருவரும் சினிமா உலகையே கலக்கிக் கொண்டிருக்க ஆரம்பத்தில் Bike-க்காக சண்டை போட்ட சுவராஸ்ய நிகழ்வை பேட்டி ஒன்றில் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் சூர்யா-கார்த்தி இருவரும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்க ஆரம்ப காலகட்டத்தில் சூர்யா கோவையில் கார்மெண்ட்ஸ் கம்பெனியிலும் கார்த்தி இயக்குநர் மணிரத்னத்தின் உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தனர். அதில் சூர்யாவை வைத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் கார்த்தி உதவியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கார்த்திக்கு இயக்குநர் அமீரின் பருத்தி வீரன் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைய அவரும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி தற்போது ஜப்பான் 25-வது படமாக அமைந்துள்ளது.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் தந்தை சிவக்குமார் FIAT காரை ஓட்ட கார்த்திக்கு சொல்லிக் கொடுக்கும் போது மிக கண்டிப்பாக நடந்து கொள்வாராம். காரை மெல்லமாகவும் கவனத்துடன் இயக்குவதற்கும் கார்த்திக்கு மிகுந்த பயிற்சி அளித்தாராம். பயிற்சியின் போது கார்த்திக்கு நிறைய அடி விழுமாம். அப்பாவின் அடிக்கு பயந்து கொண்டே இரண்டே நாட்களில் கார்த்தி கார் ஓட்ட கற்றுக் கொண்டாராம் கார்த்தி.
இதற்கு அடுத்ததாக Bike-ஐ அண்ணன் சூர்யா வாரத்தின் 5 நாட்களும் எடுத்துச்சென்று விடுவராம். சனி, ஞாயிறு கார்த்தி முறை வரும் பொழுது நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக நன்றாக துடைத்து புது பைக் போல் வைத்திருப்பாராம். ஆனால் சூர்யா இவர் தயாராகும் முன்பே பைக்கை எடுத்துச் சென்று விடுவாராம். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி செல்லச் சண்டை நிகழுமாம். ஆனால் தற்போது இருவரிடமும் விலை உயர்ந்த கார்கள் வீட்டில் அணிவகுப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கார்த்தி பையா படம் முழுக்க காரிலேயே தமன்னாவுடன் பயணம் செய்யும் ரோலில் நடித்திருப்பார். இதில் தமன்னாவைப் பார்த்து உனக்கு டிரைவிங் தெரியுமா எனக் கேட்க தமன்னா புயல் வேகத்தில் காரை ஓட்டி கார்த்தி முன் வந்து நிறுத்தி மிரள வைத்திருப்பார்.
‘ஜப்பானை’ அதிர வைத்த லோகேஷ் கனகராஜ் : AUDIO LAUNCH-ல் ஆடிப்போன அரங்கம்
அதன்பின் காற்று வெளியிடை படத்தில் ராணுவ அதிகாரியாக படம் முழுக்க ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருப்பார். கடைக்குட்டி சிங்கத்தில் டிராக்டர் விவசாயி கேரக்டருமாக கார்த்திக்கு டிரைவிங் தொடர்பான நிறைய படங்கள் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.