‘ஜப்பானை’ அதிர வைத்த லோகேஷ் கனகராஜ் : AUDIO LAUNCH-ல் ஆடிப்போன அரங்கம்

‘குக்கூ‘ படம் மூலம் தமிழ் சினிமாவில் எழுத்தாளராக இருந்து இயக்குனர் அரிதாரம் பூசியவர் தான் இயக்குநர் ராஜூ முருகன். பார்வை மாற்றுத்  திறனாளிகளின் காதலை மிக அழகாக சித்தரித்துக் காட்டிய இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி இல்லை என்றாலும் ராஜூ முருகனை சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக காட்டியது.

Raju Murugan

பின்னர் இவர் படைப்பில் உருவான ‘ஜோக்கர்’ திரைப்படம் ஆரம்பத்தில் சரியாக போகாவிட்டாலும் பின்னர் வந்த விமர்சனங்களால் வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. யாருடா இந்த டைரக்டர் என்று ராஜூ முருகனை நிமிர்ந்து பார்க்கச் செய்தது.

அதற்கு அடுத்ததாக இவர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான ‘ஜிப்ஸி‘ திரைப்படம் நாடோடிகளின் வாழ்க்கையை பற்றிய படமாகவும் அதனுடன் மத அரசியலை பேசும் படமாகவும் அமைந்திருந்தது.

லியோ ஃபீவரே இன்னும் முடியல!.. அதுக்குள்ள தளபதி 68 பூஜை வீடியோ வந்துடுச்சே!.. இவ்ளோ நடிகர்களா?..

தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் ‘ஜப்பான்‘ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. தீபாவளி விருந்தாக வரவிருக்கும் ‘ஜப்பான்’  திரைப்படத்தில் ஹீரோவாக கார்த்தியும்,கதாநாயகியாக அனு இமானுவேலும் ‘காவலா’ பாடல் புகழ் சுனில் வர்மாவும், பிக் பாஸ் புகழும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Japan

இத்திரைப்படத்திற்கான ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. லியோ திரைப்படத்திற்காக ஆடியோ வெளியீட்டு விழா அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்தது சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mass Entry கொடுத்த லோகேஷ்
இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அரங்கில் நுழையும் போது ரசிகர்களின் ஆரவாரம் தான். அவர் அரங்கில் Entry ஆகும் போது கார்த்தி, சூர்யாவை விட அதிக ஆரவாரத்துடன் Mass Entry கொடுத்தார்.

Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவில் வெறும் 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது குறித்து முன்னணி திரை நட்சத்திரங்களும் சினிமா பிரபலங்களும் ஆடிப் போய் உள்ளனர். தற்போது தமிழ் இயக்குனர்களில் அதிக அளவு சம்பளம் வாங்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தலைவர் 171 படத்திற்காக தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ் இந்திய திரை ஜாம்பவான்களை நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளார். இவரது மேக்கிங் ஸ்டைல் மற்றும் திரைக்கதையால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
LCU என்ற ஃபார்முலாவில் தன்னுடைய படங்களில் முந்தைய படத்திற்கான கதைகளின் தொடர்ச்சியை அடுத்தடுத்த படங்களில் புகுத்தி திரைக்கதையில் புது Trend-ஐ உருவாக்கி தமிழ் சினிமாவை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துசென்றவர் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிக்காக ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் லோகேஷ்! தரமான சம்பவம் தான்!

ஏற்கனவே கார்த்தியை வைத்து இவர் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் மெகா ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. பாடல்களே இல்லாமல் Night Mood-ல் உருவான இந்த திரைப்படம் பல சுவாரஸ்ய திருப்பங்களுடனும் அதிரடி சண்டை காட்சிகளுடனும்  கார்த்தியின் இயல்பான நடிப்பிலும் வசூலை வாரிக் குவித்தது.

584361 h

இந்நிலையில் நேற்று நடந்த ஜப்பான் திரைப்பட வெளியீட்டு விழாவில் முன்னணி இயக்குனர்கள் பலர் கலந்து கொள்ள அரங்கினுள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும்பொழுது ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு இதுவரை எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத வரவேற்பு என்றே சொல்லலாம். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக அவருடைய Entryஅமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...