லியோவுக்கு அதிகாலை 4 மணி காட்சி கேட்பதே ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் என்றும் ஜெயிலர் படத்தை லியோவால் தலை கீழே நின்று தண்ணி குடித்தாலும் முறியடிக்க முடியாது என ரஜினி ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வந்த நிலையில் தற்போது நடிகர் விஜயின் லியோ திரைப்படம் பல வெளிநாடுகளில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை அடித்து நொறுக்கி உள்ளது.
அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கபாலி திரைப்படம் 1.92 மில்லியன் டாலர்கள் தான் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் வசூலை முந்திய லியோ:
மேலும் உலக அளவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் அதிகபட்சமாக 145 கோடி ரூபாய் வசூலை ஈட்டி ஜெயிலர் மற்றும் ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயிலர் திரைப்படத்தின் முதலால் நாள் வசூலை சன் பிக்சர்ஸ் அறிவிக்காத நிலையில், லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூலை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டால் தாறுமாறாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் ஜனனிக்கு அடித்த ஜாக்பாட்!.. லியோவில் விஜய்யுடன் இப்படியொரு ரோலில் நடித்துள்ளாரே!..
எல்லா இடங்களிலும் வசூல் வேட்டை:
வெளிநாடுகளின் ப்ரீசேல் டிக்கெட் நிலவரங்களை வைத்து பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கணித்துள்ள கணிப்புதான் தற்போது வெளியாகி உள்ள நிலையில், விரைவில் அதிகாரப் பூர்வமாகவே லியோ சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்துக்கு ஜெயிலர் படத்திற்கு குவிந்தது போலவே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும், விஜய் ரசிகர்களுக்கு எந்த வகையிலும் போர் அடிக்காத படமாக நடிகர் விஜயின் நடிப்பு, ஆக்சன், ஃபேமிலி டிராமா என அனைத்து வகையிலும் வந்த ரசிகர்களை திருப்திப்படுத்தி லியோ அனுப்பி வரும் நிலையில், டிக்கெட் புக்கிங் இன்னமும் தீயாக தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை என்பதால் எங்கு பார்த்தாலும் சிகப்பு நிறத்தில் ஹவுஸ்ஃபுல் ஆகவே காட்சி அளிக்கின்றன.
விக்ரமுக்கே நெகட்டிவ் விமர்சனம்:
கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்திற்கு கூட சில யூடியூப் சேனல்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையிலும் அந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை செய்திருந்தது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா போர்ஷன் சுத்தமாக எடுபடவே இல்லை மற்றும் விக்ரம் மற்றும் தங்கப்பதக்கம் கதை என விமர்சிக்கப்பட்ட நிலையிலும், ரஜினிகாந்தை காண மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்ற நிலையில், அப்படியொரு வசூல் சாதனையை அந்த படம் நிகழ்த்தி இருந்தது.
லியோ படத்தில் ரஜினிகாந்த் ரெஃபரன்ஸ்!.. காக்கா – கழுகு சண்டைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த விஜய்!..
இந்த ஆயுத பூஜைக்கு எந்த ஒரு பெரிய படமும் வராத நிலையில் நடிகர் விஜயின் நடிப்பையும் ஆக்ஷனையும் காண மக்கள் தியேட்டருக்கு அணிவகுத்து செல்கின்றனர். மேலும், பல விஜய் ரசிகர்களுக்கு இன்னமும் டிக்கெட் ஒரு வாரத்திற்கு கிடைக்காத சூழலில், இரண்டாவது வாரமும் லியோ திரைப்படம் இதேபோல ஹவுஸ்ஃபுல் ஆக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்கின்றனர்.