எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பாடல்களுக்கு இவ்வளவு ரூல்ஸ் போடுவார்களா..? இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமா பொருத்தவரை எக்காலத்துக்கும் தலைசிறந்த நடிகர்களாக விளங்குபவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் ஆவர். சிவாஜி கணீர் குரல் வளம் கொண்டு தெளிவான வசன உச்சரிப்பு மூலம் காட்சிக்கு ஏற்ப உடல் மொழியினால் தன் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் எம்.ஜி.ஆர் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இவரின் படங்களில் தாய் பாசத்திற்கும் சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது என்று இவரது பாணி தனித்து இருக்கும்.

இயக்குனர் கே.சங்கர் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். இயக்குனர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தாலே மகிழ்ச்சியின் உச்சத்துக்கே செல்வார்கள். அப்படி இருக்கையில் இயக்குனர் கே.சங்கருக்கு எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியை வைத்து ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்பை பெற்றார். எம்.ஜி.ஆர் நடித்த ‘பணத்தோட்டம்’ மற்றும் சிவாஜி நடித்த ‘ஆலயமணி’ ஆகிய இரு படங்களையும் ஒரே நேரத்தில் இணையாக இயக்கினார். இரு படங்களுக்கும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருப்பார்கள்.

இரு படங்களிலும் பாடல்கள் அவரவர் பாணியில் அமைந்திருந்தாலும் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹீட்டடித்திருக்கும். ஆலயமணி படத்தில் ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்ற பாடல் சிவாஜிக்கு உரித்தான வகையில் அமைந்திருக்கும். அதேபோல பணத்தோட்டம் படத்தில் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடல் எம்.ஜி.ஆர் பாணியில் கருத்து மிக்க தத்துவ பாடலாக பிரபலமாய் இருக்கும். இரண்டு பாடல்களுமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். இதில் சிவாஜி கணேசனின் படங்களில் வரும் பாடல்களில் அடா, போடா (உதாரணம்: சட்டி சுட்டதடா.., போனால் போகட்டும் போடா..,) போன்ற வார்த்தைகள் கொண்டு வரும், சிவாஜியும் அதை ஆதரிப்பார்.

ஆனால் எம்ஜிஆர் பாடல்களில் இந்த மாதிரியான வார்த்தைகள் இருக்காது. அவர் அதை அனுமதிக்கவும் மாட்டார் காரணம் சிவாஜி முழு நடிகர். கதையில் வரும் சூழலுக்கு ஏற்ப அப்படியே தன்னை அர்ப்பணித்து முழு நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடியவர். பெரிதளவில் கட்டுப்பாடுகள் விதிக்க மாட்டார். ஆனால் எம்.ஜி.ஆர் கொள்கைகள் கொண்ட நடிகர் படத்தின் வசனம் மற்றும் காட்சிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு அமைந்திருக்கும்.

மது பழக்கம், புகைபிடித்தல் போன்ற காட்சிகள் அவரின் படத்தில் இடம்பெறாது. மேலும் மரியாதை குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்த மாட்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி அவரவர் பாணியில் நடித்ததை ரசிகர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.